July 08, 2017
ஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்கு அழைப்பு
July 08, 2017ஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய நடிகர் ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்...
ஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய நடிகர் ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்திகளின் படி, 744 புதிய உறுப்பினர்களில் இந்திய சினிமா குறிப்பாக பாலிவுட் நடிகர் நடிகைகள் அதிகம் சேர்க்கப்படவுள்ளனர். ஆமிர் கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, இர்பான் கான், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிகர்கள் பட்டியலில் உள்ளனர். மிருணாள் சென், கவுதம் கோஸ் ஆகிய இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காஸ்ட்யூம் டிசைனர் அர்ஜுன் பாசின், ஆவணப்பட இயக்குநர்களில் ஆனந்த் பட்வர்தன் ஆகியோருக்கும் உறுப்பினராக இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'பிகே' மற்றும் 'கபாலி' படங்களில் சவுண்ட் டிசைனராகப் பணியாற்றிய அம்ரித் பிரீத்தம் தத்தா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினர்கள் சேர்க்கையில் பன்முகத்தன்மை இல்லை என்ற விமர்சனம் இருந்து வந்ததையடுத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான், ஷர்மிளா தாகூர், ரசூல் பூக்குட்டி, பிரெடா பிண்டோ ஆகியோர் அடங்குவர்.