April 29, 2018
ஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்!
April 29, 2018மரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப...
மரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் தொடர்பாக விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்த பலரிடம், சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே சிலரிடம் குறுக்குவிசாரணை முடித்த நிலையில், கடந்த வாரம் இளவரசியின் வாரிசுகளான கிருஷ்ணபிரியா, விவேக், போயஸ் இல்ல சமையல்காரராக இருந்த ராஜம்மாள், மருத்துவர் சுதா சேஷய்யன் உள்ளிட்டவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்துள்ளார்.
ஆணையத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப் பட்டிருந்த சசிகலாவின் பிரமாணப் பத்திரத்தில், ‘2011-ம் ஆண்டு மத்தியில் கட்சியில் சில நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுத்தார். அப்போது, சிலர் என்னைப் பற்றி தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் கொடுத்தனர். இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் ஜெயலலிதா பேசினார். அதன்பிறகு, நான் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டேன்’ என்ற தகவலைப் பதிவு செய்திருந்தார். ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் உரசல் இருந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் கருதியதால், சசிகலா குடும்பம் வெளியேற்றப்பட்டது குறித்து சிலரிடம் விசாரிக்கப்பட்டது. அதற்கான பதிலாகத்தான், இந்தத் தகவலை சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் சொல்லியிருந்தார்.
இந்த விஷயம் குறித்து சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவிடம் குறுக்குவிசாரணை செய்யப்பட்டது. கிருஷ்ணபிரியா அப்போது, ‘‘போயஸ் கார்டன் வீட்டிலேயே நான் வளர்ந்திருந்தாலும், நான் அங்கு சென்றால், ஜெயலலிதா அனுமதித்தபிறகுதான் மாடியில் உள்ள அவரது அறைக்குச் செல்லமுடியும். 2011-ம் ஆண்டு சசிகலா போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது பத்திரிகையாளர் சோ சொல்லித்தான். அங்கிருந்து எனது தி.நகர் வீட்டில் வந்துதான் சசிகலா தங்கியிருந்தார். சில நாள்களிலேயே ஜெயலலிதாவும் சசிகலாவும் போனில் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் போயஸ் கார்டன் வரச்சொல்லி ஜெயலலிதா போனில் சொன்னதும், சசிகலா அங்கு சென்றார். சோ தயார் செய்து கொடுத்திருந்த ஒரு லெட்டரில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பிறகுதான் வீட்டுக்குள் அவர் அனுமதிக்கப்பட்டார். அந்த லெட்டரில் தினகரன், திவாகரன் பெயர்கள் இருந்தனவா என்பது எனக்குத் தெரியாது’’ என்று விளக்கியுள்ளார்.
அப்போது ஆறுமுகசாமி, ‘முதல் விசாரணையில் நீங்கள் கூறிய தகவலுக்கும் இப்போது கூறும் தகவலுக்கும் மாறுபாடு இருக்கிறதே’ என்று கிருஷ்ணபிரியாவிடம் கேட்டிருக்கிறார். “நான் ஜெயலலிதாவை ரோல்மாடலாகக் கொண்டு செயல்படுகிறேன். எதையும் மாற்றிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. முதலில் நீங்கள் கேட்ட கேள்விகள் பெரியதாகவும் புரியாமலும் இருந்தன. அதனால், எனது பதிலில் குழப்பங்கள் இருந்திருக்கும்” என்று பதில் சொன்னார் கிருஷ்ணபிரியா.
சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் உரசல் இருந்ததா என ராஜம்மாளிடமும் குறுக்குவிசாரணை செய்யப்பட்டது. ‘‘ஜெயலலிதா அதிகம் நம்பிய நபராக சசிகலா இருந்துவந்தார். அதேபோல் சசிகலாவும் ஜெயலலிதாமீது அதிகம் பாசம் வைத்திருந்தார். 2011-ம் ஆண்டு சசிகலாவை வீட்டிலிருந்து வெளியேற்றியபோது, வாசல்வரை வந்து காரில் ஏற்றி சசிகலாவை ஜெயலலிதா வழியனுப்பிவைத்தார். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக சசிகலா எங்களிடம், ‘அக்காவை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் தேவையானவற்றை செய்து கொடுங்கள். மருந்துகளைச் சரியாகக் கொடுங்கள்’ என்று சொன்னார். சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் வந்தபோதும் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்ததில்லை. இப்போது வரை ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உடைமைகள் போயஸ் கார்டன் வீட்டில் அவர்களின் அறைகளில்தான் உள்ளன’’ என்றார் ராஜம்மாள்.
ஜெயலலிதாவுக்கு எம்பாமிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யன், ‘‘எம்பாமிங் செய்யப்பட்டபோது ஜெயலலிதா உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இருந்திருந்தால் எம்பாமிங் திரவம் வெளியேறிவிடும். ஜெயலலிதா உடல்நிலை குறித்து 2016 டிசம்பர் 4-ம் தேதி மற்றும் 5-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவக்குழு மற்றும் அப்போலோ தந்த மருத்துவ அறிக்கையைப் பார்த்தபோது, ஜெயலலிதாவின் மரணம் சம்பவித்த நேரம் பற்றி எந்த முரண்பாடும் இல்லை. எக்மோ கருவி அகற்றப்படும் வரை ஜெயலலிதாவின் உடல், இயக்கத்தில் இருந்துள்ளது” என்று சாட்சியம் அளித்துள்ளார்.
‘ஜெயலலிதாவின் கன்னத்தில் ஏற்பட்ட அந்த நான்கு புள்ளிகள் குறித்து தனக்குத் தெரியாது’ என்று சுதா சேஷய்யன் சொல்லிவிட்டார். அதே நேரம், சசிகலாவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, ‘‘அந்தப் புள்ளிகள் எப்படி வந்தன என்று தெரியவில்லை” என்று சொல்லி யிருக்கிறார். அப்போலோ மருத்துவ மனை சார்பில் ஆறுமுகசாமி ஆணை யத்தில் தரப்பட்டிருந்த மருத்துவ அறிக்கைகளின் நகல்கள் இப்போது சசிகலா தரப்பிடம் தரப்பட்டுள்ளன. அவற்றை வைத்து அடுத்து குறுக்கு விசாரணை நடைபெறும். அந்த விசாரணையில், இந்த நான்கு புள்ளிகள் எப்படி வந்தன என்ற மர்மம் அவிழுமா?