திருமணம் குறித்து பிரபல நடிகை கொடுத்த அதிரடி பதில்

‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கெளசல்யா. முரளி ஜோடியாக நடித்த முதல் படமே அவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக...

‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கெளசல்யா. முரளி ஜோடியாக நடித்த முதல் படமே அவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்தார்.

‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்த கெளசல்யா, கடந்த வருடம் வெளியான ‘பிரம்மா டாட் காம்’ படத்தில் நகுலுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தற்போதும் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் கெளசல்யாவுக்கு 38 வயதாகிறது.

இந்நிலையில், கெளசல்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால், இந்தச் செய்தியை அவர் மறுத்துள்ளார்.

‘இப்போதைக்கு நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. வெளியான செய்தி பொய்யானது’ என்று தெரிவித்துள்ளார் கெளசல்யா.

மேலும் பல...

0 comments

Blog Archive