May 14, 2018
May 14, 2018
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் தொன்று தொட்டு செய்து வரும் டெம்ப்ளேட் காட்சிகள்- ஸ்பெஷல்
May 14, 2018தமிழ் சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் ஹீரோக்கள் பார்த்து படத்திற்கு செல்வதை விட இயக்குனர்கள் யார் என்று தெரிந்துக்கொண்டு தான் செல்கின்றன...
தமிழ் சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் ஹீரோக்கள் பார்த்து படத்திற்கு செல்வதை விட இயக்குனர்கள் யார் என்று தெரிந்துக்கொண்டு தான் செல்கின்றனர். அந்த அளவிற்கு இயக்குனர்கள் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் வந்துவிட்டது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலரும் தங்களுக்கு என்று ஒரு செண்டிமெண்ட் அல்லது டெம்ப்ளேட் காட்சிகள் வைத்துக்கொள்வார்கள், அதை எப்படியாவது தங்கள் படத்தில் இடம்பிடித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள், அப்படி ஒரு சில இயக்குனர்களின் டெம்ப்ளேட் காட்சிகளை பார்ப்போம்.
மணிரத்னம்
தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் பிரபலமடைந்தவர் மணிரத்னம். இவர் இயக்கும் அனைத்து படங்களிலும் பெரும்பாலும் ரயில் சம்மந்தப்பட்ட காட்சிகள் வரும், இது பலருக்கும் தெரிந்தது என்றாலும், மேலும் ஒரு சுவாரஸ்யம் மணிரத்னம் படத்தில் நீங்கள் கவனிக்கையில், எப்போதும் ஹீரோ, ஹீரோயின் ஒரு இடத்தில் படுக்கும் போது அவர்களுக்கு ஒரு டாப் ஆங்கிள் ஷாட் வைப்பார், பெரும்பாலும் மணிரத்னம் படத்தில் இப்படி ஒரு ஷாட் வந்துவிடும்.
கே.எஸ்.ரவிக்குமார்
கே.எஸ்.ரவிக்குமார் படங்கள் என்றாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது, அந்த வகையில் இவர் படங்களில் வரும் டெம்ப்ளேட் காட்சிகள் என்றால் எல்லோருக்குமே தெரியும் அவர் திரையில் வருவது தான், இதை கடைசியாக வந்த லிங்கா வரை இவர் கடைப்பிடித்து வருகின்றார்.
அட்லீ
அட்லீ படங்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், எப்படியும் ஒரு விபத்து காட்சி இருக்கும் என்று, அதன்படி ராஜா ராணி, தெறி, மெர்சல் மூன்றிலும் ஒரு விபத்து காட்சி வருவது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன்
செல்வராகவன் படங்கள் என்றாலே பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும், அந்த வகையில் அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை முதல் இரண்டாம் உலகம் வரை ஹீரோயின் ஹீரோவை ஊக்கப்படுத்தி டயலாக் பேசுவது போல் ஏதாவது ஒரு காட்சியிலாவது வந்துவிடும்.
கௌதம் மேனன்
கௌதம் மேனன் அவர் படத்தை அவரே ரீமேக் செய்து எடுப்பவர், அவர் படம் முழுவதுமே டெம்ப்ளேட் காட்சிகளாக இருக்க ஸ்பெஷலாக என்ன சொல்வது...? உற்று கவனிக்கையில் ஹீரோ கையில் காப்பு, கட்டம் போட்ட காட்டன் சட்டை, புல்லட் என ஹீரோக்களுக்கு என்று கௌதம் ஒரு வரையரை வைத்திருப்பார். இதில் சுவராஸ்யம் என்னவென்றால் கௌதமின் அனைத்து படங்களிலும் பர்ஸ்ட் சைட் அதாவது பார்த்தவுடன் காதல் என்ற பார்முலா தொடர்ந்து வரும்.
வெற்றிமாறன்
வெற்றிமாறன் படங்களில் பெரும்பாலும் தரமானதாக இருக்கும், அவர் இயக்கிய மூன்று படங்களுமே வெவ்வேறு கதைக்களம் தான், ஆனால், வெற்றிமாறன் படங்களில் கூட இருப்பவர்களே அல்லது மிகவும் நம்பியவர்களே குழி பறிப்பார்கள், எ-கா சொல்ல வேண்டுமென்றால் விசாரணையில் சமுத்திரக்கனி, ஆடுகளத்தில் பேட்டைக்காரன், பொல்லாதவனில் டேனியல் பாலாஜி சொந்த அண்ணனையே கொல்வது இப்படி ஒரு கதாபாத்திரம் பயணிக்கும்.
சிவா
சீரியஸாக எடுத்துக்கொண்டாலும் சரி, காமெடியாக எடுத்துக்கொண்டாலும் சரி. முதுகில் குத்துவது, நம்பிக்கை துரோகம் என நிரம்பி வழியும், தயவு செய்து விசுவாசத்திலாவது மாறுமா என்று ரசிகர்களே எதிர்பார்க்கின்றனர், ஏனெனில் மேலே குறிப்பிட்டவர்கள் டெம்ப்ளேட் காட்சிகள் என்றாலும் அதை திறம்பட செய்கின்றனர், ஆனால், சிவாவின் டெம்ப்ளேட் காட்சிகள் ரசிகர்களுக்கு வெறுப்பு தான்.
ராஜேஸ்
காமெடி படங்கள் எடுத்து கலக்கும் ராஜேஸ் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் வரைக்கும் ஹீரோ, ஹீரோயின் மீட்டிங் ஸ்பாட் என்பது ஒரு ட்ராவல் சம்மந்தப்பட்ட இடமாக தான் இருக்கும், அதன் பிறகு அழகுராஜா, கடவுள் இருக்கான் குமாரு படங்களில் இதை மாற்றினார், ஆனால், இந்த அனைத்து படங்களிலும் ஹீரோயின், ஹீரோவை அவமானப்படுத்தும்படியான காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறும்.