January 01, 2019
January 01, 2019
மநீம-க்கு இதுதான் முதல் தேர்தல்.. திருவாரூர் தேர்தலில் கமல் போட்டியிடுவாரா? என்ன திட்டம்?
January 01, 2019திருவாரூர் தொகுதியில் நடக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருவா...
திருவாரூர் தொகுதியில் நடக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும்.
ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தலில் எந்த கட்சி சார்பாக யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் போட்டியிட வாய்ப்பு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால் அதில் பெரும்பாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பின், அவர் சந்திக்க போகும் முதல் தேர்தலாக திருவாரூர் தேர்தல் மாறியுள்ளது. முதல் தேர்தலே மிக முக்கியமான ஒன்றாக ஆகியுள்ளது.
யார் நிறுத்தப்படுவார்கள்
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவாரூர் தொகுதியில் யார் நிற்க வைக்கப்படுவார்கள் என்பது தற்போது பெரிய கேள்விக்குறி ஆகியுள்ளது. கு. ஞானசம்பந்தம், சினேகன் உள்ளிட்ட சில பிரபலங்கள் கட்சியில் இருக்கிறார்கள். இதனால் இவர்களில் யாராவது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுவார்களா என்ற கேள்வி உருவாகி உள்ளது.
பார்வை
கமல்ஹாசன் ஏற்கனவே டெல்டா தொகுதிகளில் நற்பெயர் பெற்று இருக்கிறார். கஜா புயலின் போது மக்களுக்கு உதவியது. கஜா சேத நிலவரங்களை பார்வையிட்டது, என்று நிறைய நற்பெயர்களை கமல்ஹாசன் பெற்று உள்ளார். மக்கள் நீதி மய்யம் இங்கு போட்டியிடும்பட்சத்தில், கமல்ஹாசன் இன்னும் நேரில் போய் மக்களுடன் மக்களாக உழைக்க வேண்டி இருக்கும்.
கமல்ஹாசன் போட்டி
ஒருவேளை இந்த தொகுதியில் கமல்ஹாசனே மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனி எம்எல்ஏவாக வெற்றிபெற்று சட்டசபை செல்வாரா என்ற கேள்வி உருவாகி உள்ளது. அப்படி தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அது மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில சமயம்
சில சமயங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலை புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது. கமல்ஹாசனும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியும் நல்ல நட்பில் இருந்தவர்கள். கருணாநிதி மீது கமலுக்கு நிறைய மரியாதை இருப்பதால், அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதை இந்த முறை மட்டும் தவிர்க்க வாய்ப்புள்ளது.