July 25, 2018
விஷால் படத்தை மையமாக கொண்ட திருட்டு....10 வருடத்தில் 10 கோடி....அடேங்கப்பா செம கில்லாடிதான்....
July 25, 2018விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தில் டிஜிட்டல் குற்றங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஜெராக்ஸ் கடையில் இருந்...
விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தில் டிஜிட்டல் குற்றங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஜெராக்ஸ் கடையில் இருந்து தகவல்கள் திருடப்பட்டு அந்த தகவல்கள் மூலம் மோசடி நடப்பது குறித்த காட்சி விரிவாக கூறப்பட்டிருந்தது.
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் பாணியில் கடந்த 10 வருடங்களாக டிஜிட்டல் மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் ஜெராக்ஸ் எடுக்க வருபவர்களின் ஆவணங்களில் இருந்து தகவல்களை திருடி போலி ஆவணங்கள் தயாரித்து அந்த ஆவணங்கள் மூலம் போலி கிரெடிட் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது.
ஜெராக்ஸில் உள்ள புகைப்படத்தை மட்டும் மாற்றி இவ்வாறு கடந்த பத்து வருடங்களாக போலி கிரெடிட் கார்டுகள் பல்வேறு நபர்களின் பெயர்களில் வாங்கி அந்த கார்டுகள் மூலம் பல பொருட்கள் ஆன்லைனில் வாங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது பெயரில் மர்ம நபர் ஒருவர் கிரெடிட் கார்டு வாங்கியுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், ஆண்டனி மற்றும் வினோத் ஆகியோர்களை கைது செய்தனர்.
மேற்கண்ட மூவரும் அடுத்தவர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் கிரெடிட் கார்டு பெற்று அதனை பயன்படுத்தி வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும், இதேபோல் 10 வருடங்களாக பலகோடி ரூபாய் மோசடி செய்துள்ளதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது