May 01, 2018
யாருக்குமேவா அறிவில்ல? பிரஸ் மீது சிம்பு கடுப்பு
May 01, 2018சிம்பு எங்கு போனாலும் கூட்டம் கூட்டமாக பின்னாலேயே ஓட ஆரம்பித்துவிட்டார்கள் தொலைக்காட்சி கேமிராமேன்கள். ‘டம்ளர்ல தண்ணி வைங்க. பாட்டில்ல ஊறுக...
சிம்பு எங்கு போனாலும் கூட்டம் கூட்டமாக பின்னாலேயே ஓட ஆரம்பித்துவிட்டார்கள் தொலைக்காட்சி கேமிராமேன்கள். ‘டம்ளர்ல தண்ணி வைங்க. பாட்டில்ல ஊறுகாய் வைங்க. நெற்றியில விபூதி வைங்க’ என்று விதவிதமாக அவர் தரும் ஐடியாக்கள், காவேரியில் தண்ணீரை வரவழைக்கிறதோ இல்லையோ? சிரித்து சிரித்து கண்களில் தண்ணீரை வரவழைத்துவிடுகிறது.
ஆனால் அவரது ரசிகர்கள் மட்டும் சிம்புவின் ஒவ்வொரு செயலுக்கும் பூரிப்படைகிறார்கள். சிம்பு ஹியூமானிடி என்றொரு ஹேஷ்டாக்கை உருவாக்கி அதை ட்ரென்டிங் ஆக்கவும் ட்ரை பண்ணுகிறார்கள். இது ஒருபுறமிருக்க… தண்ணி கொடுக்க சொன்னீங்களே, காவேரியில தண்ணி வந்திச்சா? என்று கேள்வி கேட்டு கடிதம் அனுப்பி இம்சிக்கிறார்களாம் சிலர்.
நம்மள வெறுப்பேத்துறாங்களே என்று நொந்து போயிருந்த சிம்புவை மேலும் வெறுப்பேற்ற கிளம்பியிருக்கிறார்கள் இந்த சேனல் காரர்கள். சில தினங்களுக்கு முன் மன்சூரலிகானை விடுதலை செய்யக் கோரி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தாரல்லவா? அப்போது கேள்வி கேட்டு நச்சரித்தார்கள் பத்திரிகையாளர்கள்.
‘ஆமாங்க. எனக்கு மத்திய அரசுன்னா என்னன்னு தெரியாது. மாநில அரசுன்னா என்னன்னு தெரியாது’ என்று வெறுப்பாக பதில் சொல்லிவிட்டு கிளம்பினார் சிம்பு. அவர் சொன்ன பதிலில் பாதியை மட்டுமே தலைப்பாக போட்டார்கள். உண்மையில் அவர் சொன்னது இதுதான். ‘மத்திய அரசு பற்றியோ, மாநில அரசு பற்றியோ இப்ப பேச வேண்டிய அவசியம் இல்ல. உங்க கேள்விக்கு அதைவிட தெளிவா எனக்கு பதில் சொல்லத் தெரியும். ஆனால் எனக்கு தெரியாதுன்னே கூட வச்சுக்கோங்க. இப்ப நமக்கு ஆக வேண்டிய காரியம், மன்சூரலிகானை வெளியில் கொண்டு வர்றதுதான். அதைவிட்டு மற்ற விஷயங்களை பற்றி எதற்கு வெட்டியா பேசிட்டு இருக்கணும்’ என்றார்.
‘நான் சொன்னதையே புரிஞ்சுக்காம, எனக்கு ஒண்ணுமே தெரியாது. முட்டாள்ங்கிற மாதிரி மீடியா புரஜக்ட் பண்ணுறது எந்த விதத்திலும் சரியில்ல. யாரோ ஒருத்தர் இப்படி பண்ணினா பரவால்ல. யாருக்குமேவா அறிவில்ல?’ என்று தனக்கு நெருக்கமான மீடியா நண்பர்களிடம் புலம்பினாராம்.
ஆணானப்பட்ட விஜயகாந்தையே அரை லூசாக்கிவிட்ட ஊரு இது. கவனமா டீல் பண்ணுங்க சிம்பு. அவ்ளோதான் நம்ம அட்வைஸ்!