July 09, 2017
July 09, 2017
வெளியேறிய கஞ்சா கருப்பு, சோகத்தில் பரணி! அப்படி என்ன நடந்தது?
July 09, 2017பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது பரணியா இல்லை கஞ்சா கருப்புவா, அல்லது ஓவியாவா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்....
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது பரணியா இல்லை கஞ்சா கருப்புவா, அல்லது ஓவியாவா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
கஞ்சா கருப்பு வெளியேறுவதாக கமல் அறிவித்த உடனே அவர் எழுந்து மற்ற போட்டியாளர்களை கட்டிதழுவி பிரியா விடை கொடுத்தார். ஆனால் அங்கேயே நின்றுகொண்டிருந்த பரணியை கண்டுகொள்ளவே இல்லை.
அனைவருக்கும் சொல்லிவிட்டு தன்னிடம் வந்து பேசுவார் என எதிரிலேயே காத்திருந்த நடிகர் பரணிக்கு அது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவர் கண்கலங்கிய நிலையில் மிகவும் சோகமாக காணப்பட்டார்.
கடைசியாக ஓவியாவுடன் ஒரு குத்தாட்டம் போட்ட கஞ்சா கருப்பு அனைவருடனும் ஒரு செல்பி எடுத்துவிட்டு வெளியேறிவிட்டார்.
மற்ற போட்டியாளர்கள் சிலரும் கண்கலங்கியது நிகழ்ச்சியில் சோகத்தை ஏற்படுத்தியது.

‘மேஜிகல்’ ஏ.ஆர்.ரஹ்மான், ‘சபாஷ்’ சாஜல் அலி, ‘க்ளாஸ்’ ஸ்ரீதேவி - ‘மாம்’ படம் எப்படி? #Mom
July 09, 2017அறிமுக இயக்குநர் ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்க, பெரும் எதிர்பார்ப்பில் வந்திருக்கும் படம் ‘மாம...
அறிமுக இயக்குநர் ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்க, பெரும் எதிர்பார்ப்பில் வந்திருக்கும் படம் ‘மாம்’ (Mom).பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி, கணவனுக்கு இரண்டாம் தாரம். முதல் தாரத்தின் மகள் சாஜல் அலி, இன்னமும் ஸ்ரீதேவியை நேசிக்காமல் தனது தாயின் நினைவிலேயே இருக்கிறார். 18 வயதாகும் அவர், வேலண்டைன் டே பார்ட்டிக்குச் செல்ல, அங்கே நிகழ்கிறது ஓர் அசம்பாவிதம். அதிலிருந்து தப்பி, உயிர் மட்டும் எஞ்சிய நிலையில் பித்துப் பிடித்து வாழும் மகளுக்காக, அவள் வாழ்வை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை ஸ்ரீதேவி திட்டமிட்டுப் பழிவாங்கும் கதைதான் ‘மாம்’.
நடிப்பில் ஸ்ரீதேவி அசத்துகிறார். படம் முழுக்க மகள் சாஜல் அலி, தன்னை - தன் அன்பை - நிராகரிக்கும்போதெல்லாம் உள்ளுக்குள் அத்தனை ஏமாற்றம் இருப்பதை உடல்மொழியில் காட்டிக்கொண்டு, முகத்தில் லேசான புன்னகையுடன் அதைக் கடந்து செல்கிறார். மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அந்த ஆஸ்பத்திரி சீன். சிறுநீர் கழிக்க மகள் 'BedPan' வைக்கச் சொல்கிறாள். வைத்ததும், அருகிலேயே ஸ்ரீதேவி நின்றுகொண்டிருக்க, அந்த முடியாத நிலையிலும் ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்காத மகள், ப்ரைவசிக்காக ஒற்றைக்கையில் படுக்கை அருகே இருக்கும் ஸ்கிரீனை மூடுகிறார். ஒட்டுமொத்தமாக ஸ்ரீதேவி உடைந்து போகும் அந்தக் காட்சி, நடிப்புக்காக ஸ்ரீதேவிக்கும், காட்சியமைப்புக்காக இயக்குநருக்கும் கைதட்டல்களை அள்ளித் தருகிறது.
ப்ரைவேட் டிடக்டிவ் ‘DK' யாக நவாசுதீன் சித்திக். முன்வழுக்கைத் தலையும், கொஞ்சம் முன் எத்திய பற்களுமாக, அவர் நடிப்புக்குத் தீனிபோடுகிற காஸ்டிங். போலீஸ் அதிகாரியாக அக்ஷய் கன்னா. குற்றவாளிக்கு தண்டனை வாங்கித்தர முடியாதபோது ஒரு முகபாவம் வெளிப்படுத்துகிறார்.. அது க்ளாஸ் என்றால், ‘என் வேலையை இன்னொருத்தர் செஞ்சா எனக்கு பிடிக்காது’ என்று கோபமாக ஸ்ரீதேவியிடம் சொல்லும் காட்சியும், வில்லன் முன் அவருக்கும் ஸ்ரீதேவிக்குமான அந்த க்ளைமாக்ஸ் காட்சியும்.. மாஸ்!
படத்தில் எல்லாரையும் விட, நடிப்பில் ஒரு படி அதிகம் - சாஜல் அலிக்கு. அந்த வயதுக்கே உரிய துறுதுறுப்பு, அப்பாவுடன் பாசம், அம்மாவுடன் ஒட்டுதல் இல்லாமல் இருத்தல், பித்துப் பிடித்த நிலை என்று எல்லா காட்சிகளிலும் நிறைவான நடிப்பு. சபாஷ் பொண்ணே!
சந்தேகமே இல்லாமல், படத்தின் இன்னொரு ஹீரோ ஏ.ஆர்.ரஹ்மான். பின்னணி இசையில் அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் மனுஷன். ஒரு காட்சி. பார்ட்டியில் இருந்து சாஜல் அலியைக் காரில் ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள். எந்த விளக்கமும் தேவையில்லாமல் மிகச்சரியாக படமாக்கப்பட்ட காட்சி அது. அந்தப் பெரிய எஸ்.யூ.வி கார் சாலையில் செல்வதை பறவைப் பார்வையில் காட்டுகிறார்கள். சில நிமிடங்களுக்குத் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறது கார். பிறகு கார் நிறுத்தப்பட்டு... படம் பாருங்கள். அந்தக் காட்சியின் தீவிரத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உணர்த்தியிருப்பார். அந்த இசையோடு சேர்ந்து உங்கள் நெஞ்சமும் படபடவென்று இசைக்கும். அவரது கரங்களுக்கு அழுத்தமான கைகுலுக்கல்கள்.
’அவளுக்குப் புரிய வைக்கணும்னு இல்ல. நாம அவளைப் புரிஞ்சுக்கணும்’, ‘அம்மா வாழ்க்கைல புதிய மகள் வரலாம். மகள் வாழ்க்கைல புதுஅம்மா வரமாட்டாங்க’ என்று பல இடங்களில் வசனங்கள் நேர்த்தி.
‘பாபநாசம்’ போன்று பல படங்களில் நாம் பார்த்த கதைதான். 3 பேரைப் பழிவாங்க ஸ்ரீதேவி எடுக்கும் முயற்சிகளும், அவற்றில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க நவாசுதீன் சித்திக்கின் துணையும் சரிதான். ஆனால் இன்னும் அழுத்தமாக அவர்கள் சந்திக்கும் காட்சிகள் இருந்திருக்கலாம். அந்த ஆர்ட் கேலரியில் அவர்கள் சந்திக்கும் காட்சி மட்டும் கொஞ்சம் ஓகே. அதிலும் யாருக்கும் தெரியாமல் பென் டிரைவை மாற்றிக் கொள்வதெல்லாம் செயற்கைதான். நவாசுதீன் சித்திக் கதாபாத்திரத்தின் முடிவும் சினிமாத்தனம். அதுவும் அந்தக் கடைசி வில்லன் வந்து செய்யும் வேலைகள் எல்லாம் எண்பதுகளை ஞாபகப்படுத்துகின்றன.
முதல் பகுதியில் கொஞ்சம் தொய்வாகும் திரைக்கதையைப் பொறுத்துக் கொள்ளத் தயாரானால், ‘மாம்’ உங்களை நிச்சயம் கவரும்.
July 08, 2017
ஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்கு அழைப்பு
July 08, 2017ஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய நடிகர் ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்...
ஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய நடிகர் ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்திகளின் படி, 744 புதிய உறுப்பினர்களில் இந்திய சினிமா குறிப்பாக பாலிவுட் நடிகர் நடிகைகள் அதிகம் சேர்க்கப்படவுள்ளனர். ஆமிர் கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, இர்பான் கான், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிகர்கள் பட்டியலில் உள்ளனர். மிருணாள் சென், கவுதம் கோஸ் ஆகிய இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காஸ்ட்யூம் டிசைனர் அர்ஜுன் பாசின், ஆவணப்பட இயக்குநர்களில் ஆனந்த் பட்வர்தன் ஆகியோருக்கும் உறுப்பினராக இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'பிகே' மற்றும் 'கபாலி' படங்களில் சவுண்ட் டிசைனராகப் பணியாற்றிய அம்ரித் பிரீத்தம் தத்தா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினர்கள் சேர்க்கையில் பன்முகத்தன்மை இல்லை என்ற விமர்சனம் இருந்து வந்ததையடுத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான், ஷர்மிளா தாகூர், ரசூல் பூக்குட்டி, பிரெடா பிண்டோ ஆகியோர் அடங்குவர்.

4 ஜி வோல்ட்இ போன் : ரூ.500 மட்டுமே! -ஜியோவின் அடுத்த அதிரடி?
July 08, 2017கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ 4ஜி சேவைகளில் ஏப்ரல் 2017 வரை சுமார் 11.25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். புதிய வெளியீடு மேலும்...
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ 4ஜி சேவைகளில் ஏப்ரல் 2017 வரை சுமார் 11.25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். புதிய வெளியீடு மேலும் ஒரு பலத்த போட்டியை டெலிகாம் சந்தையில் ஏற்படுத்தும் என நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். புதிய வெளியீடு முன்னணி நிறுவனங்களின் பெரும்பா லான பிரீபெயிட் வாடிக்கையாளர்களை இழக்கச் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் ஜியோ மட்டுமே 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் வைத்துள்ளது, மற்ற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா உள்ளிட்டவை வோல்ட்இ நெட்வொர்க்கில் வோல்ட்இ சேவையை சோதனை செய்து வருகின்றன. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ வெறும் 500 ரூபாய்க்கு 4ஜி ரக வோல்ட் போனை விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ப்ரீ கால், டேட்டா என அடுத்தடுத்த தனது அதிரடி அறிவிப்புகளால் ரிலையன்ஸின் ஜியோ வாடிக்கையாளர்களை தனது கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஜியோவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன.
இந்நிலையில் மலிவு விலையில் 4ஜி வோல்ட் ரக போனை வெறும் 500 ரூபாய்க்கு அறிமுகம் செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்ப டுகிறது. இதன் உற்பத்தி செலவே 1500 ரூபாய்க்கு மேல் ஆகும் நிலையில், ஜியோ 700 ரூபாய் வரை மானியம் வைத்து வெறும் 500 ரூபாய்க்கு இந்த போனை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், 80 ரூபாயிலிருந்து 90 ரூபாய்க்குள் டேட்டா வசதியும் செய்து கொடுக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோவின் 500 ரூபாய் 4ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டால் இந்தியாவில் இருக்கும் அதிகளவிலான 2ஜி வாடிக்கையாளர்கள் 3ஜிக்குள் நுழையாமல் நேரடியாக 4ஜிக்குள் எளிதில் நுழைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூதாட்ட கிளப்பில் ரஜினி! போட்டோவை வெளியிட்ட சுப்ரமணியன் சுவாமி
July 08, 2017ரஜினியை பிஜேபிதான் இயக்கி வருகிறது என்றொரு எண்ணம் மக்கள் மனதில் நிறைந்துவிட்டது. அதை மாற்ற எப்படியெப்படி எல்லாமோ முயற்சி செய்தாலும், “கொண...
ரஜினியை பிஜேபிதான் இயக்கி வருகிறது என்றொரு எண்ணம் மக்கள் மனதில் நிறைந்துவிட்டது. அதை மாற்ற எப்படியெப்படி எல்லாமோ முயற்சி செய்தாலும், “கொண்டைய மறைக்க முடியலேப்பா…” கதையாகவே அமைந்து விடுவதால், பிஜேபியே ஒரு புதுத்திட்டம் வகுத்தது போல தெரிகிறது. அதன் விளைவுதான் பிஜேபி முக்கியஸ்தர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து ரஜினி குறித்து கேவலமான முறையில் விமர்சித்து வருகிற நாடகக் காட்சி.
அதன் உச்சக்கட்டமாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் ரஜினி அமெரிக்காவிலிருக்கும் சூதாட்ட கிளப் ஒன்றில் அமர்ந்து சூதாடிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை வெளியிட்டு அவர் ரஜினிக்கு கொடுத்திருக்கும் அடைமொழிதான் அநாகரீகத்தின் உச்சம். காண்க சு.சு ட்விட். (இருந்தாலும், நாடகத்தில் இப்படியெல்லாம் வசனம் இருந்தால்தானே இன்ட்ரஸ்ட்?)
என்னதான் சுப்ரமணியன் சுவாமி, ஒரு பக்கம் ரஜினிக்கு எதிராக விமர்சனங்களை வைத்தாலும் தமிழகத்தில் எடுபடப்போகிறதா என்ன? ஏன்? “ ஒருகாலத்தில் நான் அப்படி இருந்தேன். இப்படி இருந்தேன். அதனால் உடம்பு பாழாப்போச்சு. நீங்களாவது உடம்ப பத்திரமா ஆரோக்கியமா வச்சுக்கோங்க” என்று வெளிப்படையாக ரஜினி பேசியதை நிறையவே ரசித்தார்கள் அவரது ரசிகர்கள். அப்படியிருக்க… ரஜினி சூதாடுவது ஒன்றும் பெரிய தேசத் துரோகமும் அல்ல. இதற்கெல்லாம் தமிழகம் சின்னதாகக்கூட முகம் சுளிக்கப் போவதில்லை.
ஐயோ பாவம் சு.சு.

January 12, 2016
நக்கீரன் முழு இதழ்-Nakkheeran 05.01.2016 படிக்கலாம்
January 12, 2016இங்கே தொடர்ந்து படிக்கலாம்...