முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை!’ - திருப்பதியில் கும்பாபிஷேக நாள்களிலும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி

திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயில்  மகா சம்ப்ரோக்ஷண வைபவங்கள், ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. பன்னிரண...

திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயில்  மகா சம்ப்ரோக்ஷண வைபவங்கள், ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, `ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 மணி முதல் சுவாமி தரிசனம் ரத்துசெய்யப்படுகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இதற்கு, பக்தர்களிடையே பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் அதிருப்தியைப் பதிவுசெய்திருந்தார்கள்.

இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர், திருமலை திருப்பதி தேவஸ்தானம், கும்பாபிஷேகம் தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிவிப்பை திரும்பப்பெற்றது. `கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில், எந்த வழிமுறையில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்பதுகுறித்த தங்களின் மேலான கருத்துகளை வருகிற 23-ம் தேதி வரை தெரிவிக்கலாம். தேவஸ்தானம், திறந்த மனதுடன் பக்தர்களின் கருத்தைக் கேட்டறியக் காத்திருக்கிறது’ என்று கோயில் நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக் கேட்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று ( 24-ம் தேதி) நடைபெற்றது. அதன்படி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்களை   ஆகஸ்ட் 11 முதல் 16 -ம் தேதி முடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. இந்த நாள்களில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் . வி.ஐ.பி தரிசனம், சர்வதரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படும். இவ்வாறு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive