2.0 பற்றி ஷங்கரிடம் ரஜினி வருத்தம்! வெளிவராத பரபரப்பு தகவல்கள்!

ஷங்கர், ரஜினிக்கு மட்டுமல்ல… தமிழ்சினிமாவுலகத்திற்கே மிக முக்கியமான படமாக விளங்கப் போவது 2.0 திரைப்படம்தான். குடும்பம் குடும்பமாக தியேட்டரு...

ஷங்கர், ரஜினிக்கு மட்டுமல்ல… தமிழ்சினிமாவுலகத்திற்கே மிக முக்கியமான படமாக விளங்கப் போவது 2.0 திரைப்படம்தான். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது இப்படத்தின் ட்ரெய்லரும் அதை தொடர்ந்து வரும் செய்திகளும். அநேகமாக 2.0 வந்த பின்தான் ரஜினி தன் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிப்பாரோ என்கிற அளவுக்கு சத்து மிகுந்த டானிக்காக இருக்கிறது இப்படத்தின் இமேஜ்.

இந்த நிலையில்தான் 2.0 படத்தின் புல் எடிட்டர்டு வெர்ஷனை முழுசாக உட்கார்ந்து பார்த்தாராம் ரஜினி. படம் முடிந்ததும் அருகிலிருந்த ஷங்கரிடம் ரஜினி கேட்ட கேள்விதான் பலத்த ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. “எங்கிட்ட கதை சொல்லும்போது இப்படியில்லையே?” என்பதுதான் அந்த ஷாக் கேள்வி.

படத்தின் கதை என்ன?

செல்போன் டவர்களாலும், அதிர்வுகளாலும் பறவை இனங்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானம் கூறுகிறது. இதைதான் தன் 2.0 ல் அஸ்திவாரமாக வைத்து கதை பின்னியிருக்கிறார் ஷங்கர். அப்படி பாதிக்கப்படும் பறவை இனங்களில் ஒரு ராட்சத பறவைதான் அக்ஷய்குமார். தன் இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் மனித இனத்திற்கு பாடம் கற்பிக்க வருகிறது அப்பறவை.

மனிதர்கள் கையிலிருக்கும் செல்போன்களை மட்டுமல்ல, நாடெங்கிலும் இருக்கும் செல்போன் டவர்களை எரித்தும் உடைத்தும் அட்டகாசம் செய்கிறது. கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் செல்போன்களும் பறந்து வானத்தோடு வானமாக ஐக்கியமாகிறது. அக்ஷய் குமாரின் அட்டகாசத்தை அடக்க கிளம்புகிறார் சிட்டி என்கிற ரோபோ ரஜினி. கடும் போராட்டத்திற்குப் பின் ஒரு வழியாக பறவையின் கொட்டம் அடக்கப்படுகிறது. நாடு சகஜ நிலைக்கு திரும்புகிறது.

இந்த கதைப்படி பார்த்தால், எல்லாருடைய பரிதாபமும் பறவை இனங்கள் மீதும், அந்த இனத்திற்காக போராடுகிற அக்ஷய் குமாரின் மீதும்தான் வரும். தான் வில்லனாக சித்தரிக்கப்படுவோம் என்கிற அச்சம் வந்திருக்கிறதாம் ரஜினிக்கு.

அதைதான் நாகரீகமாக ஷங்கரிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி. அக்டோபர் முதல் வாரத்திற்குள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிக்கப்பட்டு என் டேபிளுக்கு வந்தாகணும் என்று கடுமையான உத்தரவை போட்டுவிட்டார் ஷங்கர்.

பறவையே வா… பழத் தோட்டம் காத்திருக்கிறது!

மேலும் பல...

0 comments

Blog Archive