எமனாக மாறிய கூகுள் மேப்! ஒரே நேரத்தில் சேற்றில் சிக்கிய 100 கார்கள்!!

எமனாக மாறிய கூகுள் மேப்! ஒரே நேரத்தில் சேற்றில் சிக்கிய 100 கார்கள்!! அமெரிக்காவில் கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்றதால், ஒரே நேரத்தில் 1...

எமனாக மாறிய கூகுள் மேப்! ஒரே நேரத்தில் சேற்றில் சிக்கிய 100 கார்கள்!!
அமெரிக்காவில் கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்றதால், ஒரே நேரத்தில் 100 கார்கள் சேற்றில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலரேடோ மாகாணத்தில் கோன்னீ என்பவர் கூகுள் மேப் பயன்படுத்தி அங்குள்ள ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூகுள் மேப்பில், விமான நிலையத்துக்கு மாற்றுப் பாதையில் செல்லாம் என்பது போல வேறொரு பாதையை காட்டியது. மேலும், இந்த மாற்று பாதையில் சென்றால், 20 நிமிடங்கள் சீக்கரமாக ஏர்போர்ட்டுக்கு சென்று விடலாம் என்று காண்பித்துள்ளது. இதை நம்பி கொன்னீ மாற்றுப் பாதையில் சென்றுள்ளார்.

ஆனால், கூகுள் மேப் காட்டிய பாதை சேறும் சகதியும் நிரம்பிய ஒரு பொது வெளியில் சென்று முடிந்தது. இதனால், கொன்னீயின் கார் சகதியில் மாட்டிக் கொண்டது. இதே போல், சுமார் 100க்கும் மேற்பட்ட கார்கள் அதே சகதி வழியில் மாட்டிக் கொண்டு நின்றுள்ளது.

ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் சகதியில் மாட்டிக் கொண்டமையால், திரும்புவதற்கு கூட வழியில்லாமல் திக்கு முக்காடி போனது. மேலும், குறித்த நேரத்தில் விமான நிலையத்துக்குச் செல்ல முடியாமல் பலர் தவித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கூகுள் மேப்பில் ஏற்பட்டதாக கூகுள் தரப்பில் இருந்து விளக்கமும் மன்னிப்பும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல...

0 comments

Blog Archive