Nita Ambani-யின் கைப்பை விலை 2.6 கோடியாம்..! அப்படி அந்த பைல என்ன தாங்க இருக்கு..?

 நீதா அம்பானி (Nita ambani) தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒரு Non Executive இயக்குநராக இருக்கிறார். அதோடு மும்பையில் இருக்கும் திருபாய் ...

 நீதா அம்பானி (Nita ambani) தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒரு Non Executive இயக்குநராக இருக்கிறார். அதோடு மும்பையில் இருக்கும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவராகவும் இருந்து நடத்தி வருகிறார்.

அவ்வளவு ஏன், வணிகம் மற்றும் பொருளாதாரம் படித்த நீதா அம்பானி தான், இந்தியாவில் இருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் இந்தியப் பெண் உறுப்பினர். இத்தனை வேலைக்கு மத்தியில் தான் மும்பை இந்தியன்ஸ் டீமை நடத்துவது, வீட்டை நிர்வகிப்பது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. சரி விஷயத்துக்கு வருவோம். அது மட்டுமின்றி ரிலையன்ஸ் அமைப்பின் (Reliance foundation) தலைவரும் நீதா அம்பானி தான்.

இந்த 200-க்கும் மேற்பட்ட வைரக் கற்கள் பதித்த Hermès Himalaya Birkin bag உடன் கொடுத்திருக்கும் போஸ் தான் தற்போதைய சோஷியல் மீடியா வைரல். இந்த ஒரு கைப் பையின் விலை 2.6 கோடி ரூபாயாம்.

இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நடிகை கரிஸ்மா கபூர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர், கரிஸ்மா கபூர், உடன் நீதா அம்பானி, அந்த 2.6 கோடி ரூபாய் மதிப்பிலான கைப்பையை அசால்டாக மாட்டிக் கொண்டு போஸ் கொடுக்கிறார்.

Hermès Himalaya Birkin bag தான் கைப்பைகளின் அரசன் எனச் சொல்லலாம் என்கிறது உலகின் முன்னனி ஏல நிறுவனங்களில் ஒன்றான க்றிஸ்டீஸ். அதோடு இந்த விலை உயர்ந்த கைப்பைகளை நைல் நதிகளில் இருக்கும் முதலைகளின் தோலில் இருந்து பதப்படுத்தி செய்திருக்கிறார்களாம். ஹிமாலயா என்பது இவர்கள் கைப்பைகளின் வண்ணத்தை குறிப்பதாம்.

கடந்த 2017-ம் ஆண்டில், விலை உயர்ந்த கலை பொருட்கள் மற்றும் அரிய பொருட்களை ஏலம் விட்டுக் கொடுக்கும் உலகின் முன்னனி ஏல நிறுவனங்களில் ஒன்றான க்றிஸ்டீஸ் ஒரு Hermès Himalaya Birkin bag-ஐ ஏலம் விட்டுக் கொடுத்தார்கள். அந்த கைப்பை சுமார் 3.79 லட்சம் டாலர் விலை போனதாம். இதுவரை க்றிஸ்டீஸ் நிறுவனம் ஏலம் விட்டுக் கொடுத்த பைகளிலேயே அதிக விலை போன பை இந்த Hermès Himalaya Birkin bag தான் என அதன் அருமை பெருமைகளைச் சொல்கிறார்கள்.

சரி அப்படி இந்த கைப்பையில் என்ன தான் இருக்கிறது எனப் பார்த்தால் எல்லாம் தங்கம் வைரம் தான். இந்த ஒரு குட்டி கைப்பையில் 240 வைரக் கற்கள் மற்றும் 18 கேரட் தங்கம் என ஒரு மினி நகைக் கடையையே நீதா மேடம் கையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறாராம்

மேலும் பல...

0 comments

Blog Archive