துரைமுருகனுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவி- மதுசூதனன் சொன்ன நெகிழ்ச்சியான தகவல்!

துரைமுருகனுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவி- மதுசூதனன் சொன்ன நெகிழ்ச்சியான தகவல்! நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக ...

துரைமுருகனுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவி- மதுசூதனன் சொன்ன நெகிழ்ச்சியான தகவல்!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. இந்த சூழலில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி, வேலூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இதையொட்டி வேலூரில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது நடந்த நிகழ்வு ஒன்றை கூறுகிறேன். அப்போது சஞ்சீவிராயன் கோவில் தெருவில் மாணவர் முழக்கம் நடைபெற்றது. அந்த சமயத்தில் ஒரு சட்டைக்கு மாற்று சட்டை இல்லாமல் துரைமுருகன் தவித்தார்.

ரூ.15 கொடுத்தால் புதிய சட்டை வாங்கிக் கொள்வதாக கூறினார். இதுபற்றி நான் எம்.ஜி.ஆரிடம் எடுத்துரைத்தேன். உடனே அவர் சட்டை, பேண்ட், ஷூ, வாட்ச் உள்ளிட்டவற்றை துரைமுருகனுக்கு வாங்கிக் கொடுத்தார்.

மேலும் முரசொலி கல்லூரியில் படிக்க பண உதவி செய்தார். இந்த நன்றியை மறந்துவிட்டு, கருணாநிதி உடன் சேர்ந்து கொண்டார். சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தி இருக்கிறார்.

இதற்கு எம்.ஜி.ஆர் தொண்டனாக நாம் என்ன செய்ய வேண்டும். சரியான பாடம் கற்பிக்க வேண்டும் அல்லவா. எனவே துரைமுருகனையும், அவனது மகனையும் வரும் தேர்தலில் நாம் தோற்கடிக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து பேசிய எம்.பி வைத்தியலிங்கம் பேசுகையில், அறிஞர் அண்ணா சொன்னதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். ஆட்சி என்பது நாம் தோளில் போடும் துண்டு போன்றது. ஆனால் கட்சி என்பது இடுப்பில் கட்டும் வேட்டி போன்றது.

ஆட்சி போனாலும், கட்சியை விட்டுவிடக் கூடாது. பின்னர் ஆட்சியை பிடித்துக் கொள்ளலாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காப்பாற்றி வளர்த்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

மேலும் பல...

0 comments

Blog Archive