பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற வேலூர் கணியம்பாடி கிராம பெண்கள்.. தண்ணீரை காக்க அசத்தல் முயற்சி

பிரதமர் நரேந்திர மோடி தனது மான் கீ பாத் உரையில், வேலூர் கணியம்பாடி வட்டார கிராம பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து நாகநதியை காப்பற்...

பிரதமர் நரேந்திர மோடி தனது மான் கீ பாத் உரையில், வேலூர் கணியம்பாடி வட்டார கிராம பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து நாகநதியை காப்பற்ற களம் இறங்கியதை வெகுவாக பாராட்டி பேசி உள்ளார். தண்ணீர் பிரச்னையை தீர்க்க உறைகிணறுகள் அமைத்துக்காக கிராம மக்களை பிரதமர் பாராட்டி உள்ளார்.

தண்ணீர் பிரச்னையால் நாடே தவித்து வரும இன்றை சூழலில் பல ஊடகங்களால் கவனிக்கப்படாத ஒரு விஷயத்தை பிரதமர் மோடி கவனித்து இருக்கிறார். வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் நாகநதியை காக்க மக்கள் நடத்திவரும் முயற்சியை வெகுவாக பாராட்டி பிரதமர் மோடி பேசி உள்ளார்.

பிரதமர் மோடி வானொலியில் மான் கீ பாத் உரையில் பேசும் போது, வேலூர் மாவட்டம், கணியம்பாடி வட்டாரத்தில் நாக நதியில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டுவதாக குறிப்பிட்டார்.

ஆறு செல்லும் நீர் வழிப்பாதையில் 100 மீட்டர் இடைவெளியில், 6 அடி அகலம், 15 அடி நீளம், 20 அடி ஆழத்துக்கு கிணறுகள் அமைக்கப்படுவதாகவும் , இந்த செறிவூட்டும் கிணறுக்குள் மழை நீரை அனுப்ப தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளதகாவும் மோடி குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ஊரக வளர்ச்சியின் முகமையின் கீழ் 20,000 பெண்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்றும்,. இதனால் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி சொல்வது போல் நாகநதியை காக்க கடந்த 5 ஆண்டுகளாக 20 ஆயிரம் பெண்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இந்த நதியின் குறுக்கே 350 செறிவூட்டும் கிணறுகளும், 210 செக் டேம்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கிணறுகள் அமைக்கப்பட்டதால் வேலூர் கணியம்பாடி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive