முதியவர்கள் தேசமாக மாறும் இந்தியா.. சிறுவர்கள் எண்ணிக்கை குறையுது.. பொருளாதார ஆய்வறிக்கை எச்சரிக்கை

இந்திய மக்கள் தொகையில் கணிசமானோர் வயது மூப்பு அடையத் தொடங்கியுள்ளதால், ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் ...

இந்திய மக்கள் தொகையில் கணிசமானோர் வயது மூப்பு அடையத் தொடங்கியுள்ளதால், ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாளை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முக்கியமான பல அம்சங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இப்படி ஒரு அதிரடி பரிந்துரையும் உள்ளது.

2021-31 க்கு இடையில் நாட்டின் உழைக்கும் மக்கள் தொகை ஆண்டுக்கு சுமார் 9.7 மில்லியனாக அதிகரிக்கும் என்பதால், அடுத்த 10 ஆண்டுகளுக்கான "மக்கள்தொகை பங்கு பகிர்வு" மூலம், இந்தியா பயனடைய வேண்டும். அதேநேரம், கருவுறுதல் வீதம் குறைந்து கொண்டே செல்வதால், இதே நிலை மிக நீண்ட காலத்திற்கு நீடிக்காது. மீண்டும் பழைய நிலைக்கு நாடு திரும்பும்.

ஒரு பக்கம் முதியோர் எண்ணிக்கை கூடுவதால், ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டியது கட்டாயம் என்பதைபோலவே, சிறுவர்கள் எண்ணிக்கை குறைவதால், பள்ளிகள் காலியாகும் சூழ்நிலை உள்ளது. எனவே பள்ளிக்கூடங்களை இணைப்பது கட்டாயமாகும்.

5-14 வயதிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இது பள்ளி இணைப்பின் தேவைக்கு வழிவகுக்கும். ஏற்கனவே இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான துவக்க பள்ளிகளில், தலா 50 க்கும் குறைவான மாணவர்கள்தான் உள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான முதியவர்கள் உருவாகப்போகிறார்கள் என்பதால், அரசு இதை எதிர்கொள்ள தயாராக வேண்டும். 2041 ஆம் ஆண்டில் 60 வயதிற்கு மேற்பட்ட வயதுள்ளோர் எண்ணிக்கை 239.4 மில்லியன் என்ற அளவில் இருக்கும். 2011ல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 104.2 மில்லியன்தான் இருந்தனர்.

எனவே, இந்த பிரச்சினையை எதிர்கொள்ள, சுகாதாரப் பணிகளில் முதலீடுகள் தேவை. படிப்படியாக, ஓய்வூதிய வயதை அதிகரிக்கவும் திட்டம் தேவை.

இதற்கிடையில், 0-19 வயதுக்குட்பட்ட சிறார்கள் எண்ணிக்கை ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ளது. அந்த வயதினரின் மக்கள் தொகை விகிதம் 2041 ஆம் ஆண்டில் 25 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive