ஞாயிற்று கிழமைகளில் சேனல்கள் விரட்டி அடிக்கறாங்களே!

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் டிவி சேனல்கள் என்டர்டெயினுக்கு என்று பெரிதாக .மெனக்கெடுவது இல்லை. நிறைய குடும்பங்கள் இதன...

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் டிவி சேனல்கள் என்டர்டெயினுக்கு என்று பெரிதாக .மெனக்கெடுவது இல்லை. நிறைய குடும்பங்கள் இதனாலேயே வெளியில் சென்று விடுகிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட்,இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளில் கால்பந்து, இல்லை ரெஸ்லிங் போன்ற போட்டிகளில் சில குடும்பங்களில் ஈடுபாடு காண்பிக்கிறார்கள். அதுவும் இப்போது உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்துவிட்டது.

மழையாக இருந்தாலும், ஞாயிற்று கிழமைகளில் குடும்பமாக பீச்சில் பொழுதைக் கழிக்கிறார்கள். அந்த அளவுக்கு சேனல்களில் எந்த நிகழ்ச்சிகளும் இல்லை.

தியேட்டர் சன் டிவி

ஞாயிற்று கிழமைகளில் சன் டிவி தியேட்டர் மாதிரியே ஆகிவிட்டது. அன்று ,மட்டும் இரவு வரை மூன்று படங்கள்.கிராமங்களில் பிள்ளைகள் காலையிலேயே படம் பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.அதுவும் ஓவர் சவுண்டு வச்சுக்கிட்டு, படம் பாட்டுக்கு டிவியில் ஓட, இவர்கள் படத்தையும் பார்ப்பதில்லை.ஒண்ணு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்,இல்லையா விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். டிவியை ஆஃப் பண்ணிட்டு விளையாடுங்கன்னு சொன்னால் நாங்க ஞாயிற்று கிழமைகளில்கூட டிவி பார்க்க கூடாதான்னு கேட்டு, வீட்டை சினிமா தியேட்டர் மாதிரி ஆக்கிடறாங்க.

போட்டதையே போட்டு

விஜய் டிவியா கேட்கவே வேண்டாம்.இந்த ராமர் வீடுன்னு ஒரு ரியாலிட்டி ஷோவாம். அடிக்கற கூத்து இருக்கே...ரொம்ப ஓவர்! அதோடு சிறுத்தை போன்ற படங்களை திரும்ப திரும்பபோட்டு தேய்க்கறாங்க. அதை பார்க்கறதுக்கு சன் டிவியில் படம் பார்ப்பதே மேல்னு விட்டுடறாங்க. கலர்ஸ் தமிழ் டிவியில் பார்க்கலாம் என்று மாற்றினால், ஜாக்கிசானின் கராத்தே கிட் ஒரே படத்தையே வாரத்தின் அத்தனை ஞாயிற்று கிழமைகளிலும் போட்டு, அந்த படத்தையே வெறுக்க வச்சுடறாங்க.

நாளைய இயக்குநர்

கலைஞர் டிவியினை மாற்றினாலும் இதே நிலைதான்.போட்ட படத்தையே போட்டு, உண்மையில் இந்த பில்லா, தசாவதாரம், குருவி படத்தின் வசனங்கள் காட்சிகளை எல்லாம் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட, எந்தெந்த நடிகர்கள் காட்சிகள், என்ன கலர் உடைகள் என்று எல்லோரும் சொல்லிவிடலாம். ஒரு காலத்தில் மானாட மயிலாட பார்க்க குடும்பமே வெளியில் எங்கும் போகாமல் காத்திருந்த காலங்கள் உண்டு.

என்ன இப்போ?

ஞாயிற்று கிழமைகளில் சேனல்கள் உங்களை வீட்டை விட்டு விரட்டி அடிக்கின்றனவா? விளையாட்டு சேனல்கள் வைத்து பாருங்கள், ஆங்கில படங்களைப் பாருங்கள். சன் டிவியில், விஜய் டிவியில் ப்பார்க்கிற மாதிரியான நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.கலைஞர் தொலைக் காட்சியில் நாளைய இயக்குநர் பாருங்கள், கிரியேட்டிவிட்டி கிடைக்கும்.

சேனல்கள் மாறலேன்னா என்ன...நாம் மாறிக்கலாமே!

மேலும் பல...

0 comments

Blog Archive