வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்
March 13, 2018வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வெளி வர இருக்கும் அவர...
இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்புமே தமிழ் சினிமா ரசிகர்கள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகிவருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார் என்பதே தற்பொழுதைய சுவாரஸ்யமான செய்தி.இந்த பாடல் , பிரம்மாண்டமான செட் மற்றும் அருமையான நடன இயக்கத்தின் துணையுடன் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து இயக்குனர் R கண்ணன் பேசுகையில் , '' ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தை கொண்ட action படம் தான் 'பூமராங்'. இப்படத்தில் தேசப்பற்று பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடலிற்காக முற்றிலும் வித்யாசமான செட் அமைக்கலாம் என்பதற்காக ஒரு மிக பிரம்மாண்ட செட்டை அமைத்தோம். இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் எனது இந்த கனவை அழகாக புரிந்துகொண்டு நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான பாடலை தந்துள்ளனர்.
கலை இயக்குனர் ஷிவா யாதவின் பிரம்மாண்டமான செட்டும் பிருந்தா அவர்களின் அசத்தலான நடன இயக்கத்திலும் இந்த பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது. சுமார் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் நமது சினிமா துறையின் சிறந்த 100 நடன கலைஞர்கள் இந்த பாடலில் உள்ளனர்.
பூமராங் ' படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் "மேயாத மான் " படத்தில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த பெயர் வாங்கிய இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தான். மிகவும் சவாலான கதா பாத்திரம் அது. அந்த வேடத்தில் நடிக்கும் நடிகையர் தேர்வு நடக்கும் போது என் குழுவினர் அனைவரின் ஏகோபித்த தேர்வு இந்துஜாதான்.
அந்த அளவுக்கு முதல் படத்திலேயே இந்த பெயர் வாங்கியது பெரிய விஷயம். திட்டமிட்ட படியே செயல் புரிந்ததால் படப்புடிப்பு மிக வேகமாகவும் அருமையாகவும் நடந்துவருகிறது '' என்றார்.
அறம் கோபி டயலாக்கில் அஜீத்! இனி வேற லெவல் பாலிடிக்ஸ்!
March 13, 2018ஜெயலலிதா அப்போலோ வில் சேர்வதற்கு முன் ரஜினிக்கும் கமலுக்கும் ஒரே எண்ணம்தான் இருந்திருக்கும். அது? ‘சினிமாவில் இப்போது இருக்கிற டாப் இடத்தை ...
இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரு முன்னோட்டமான பதில்தான் அறம் கோபியும், அஜீத்தும் இணைவது. மீஞ்சூர் கோபி, கோபி நயினார், அறம் கோபி என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், சமூக கருத்துக்களை தன் படங்களில் பேசுகிற விதத்தில் அவர் எப்போதுமே நெருப்பு கோபி.
அறம் படத்தில் நயன்தாராவுக்கு வேறொரு இமேஜை ஏற்படுத்தித் தந்தவர்கள் என்பதோடு, படத்தில் அவர் பேசியிருக்கும் கருத்துக்களும் எழுத்துக்களும் அவ்வளவு பலம் வாய்ந்தவை. என் பாணி இதுதான். நான் இனிமேல் இயக்கப் போகிற எல்லா படங்களிலும் மக்களுக்கான கருத்துக்கள்தான் இருக்கும் என்று பேசி வருகிறார் கோபி.
அறம் தயாரிப்பாளர் ராஜேஷ் தயாரிப்பில் அஜீத் நடிக்கப்போகும் படம் கிட்டதட்ட முடிவாகிவிட்டது. இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இதில்தான் அறம் கோபியை டயலாக் எழுத வைத்திருக்கிறார் ராஜேஷ். தன் நெருப்பு வார்த்தைகளால் அஜீத்தை அரசியல் பக்கம் இழுக்கவும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.
சும்மாவே நெருப்பு. அதை அஜீத் பேசினா?
Houston Mesothelioma and Asbestos Attorneys Heard Robins Cloud & Black, LLP
March 13, 2018This text will be replaced For nearly two decades, Houston, TX mesothelioma lawyers Heard, Robins, Cloud & Black, LLP, have fought f...
This text will be replaced
For nearly two decades, Houston, TX mesothelioma lawyers Heard, Robins, Cloud & Black, LLP, have fought for the rights of asbestos victims who have developed the form of cancer known as mesothelioma. Our attorneys represent clients across the country and have a proven track record of recovering damages from those who knowingly exposed victims to asbestos. If you or a loved one has been the victim of asbestos exposure, please contact Heard, Robins, Cloud & Black, LLP, today at (800) 499-1797 to schedule a free consultation.
Our asbestos attorneys specialize exclusively in mesothelioma cases, and we are devoted to serving asbestos victims. Unlike some firms, we do not refer our clients to other attorneys after accepting your case. The lawyers at Heard, Robins, Cloud & Black, LLP will oversee your case from the initial consultation to the final settlement or verdict. Our settlements and verdicts have been covered in such respected publications as:
The Wall Street Journal
The New York Times
The National Law Journal
Fortune
Forbes
Businessweek
The Houston Chronicle
We are passionate about obtaining justice for those whose lives have been forever and irreversibly altered by exposure to asbestos. As experienced mesothelioma attorneys, we understand the details specific to these kinds of cases and do everything possible to protect the rights of our asbestos victims.
Even if you have not been directly exposed to asbestos in the workplace, it is possible to receive indirect exposure when an employee brings asbestos home on his or her clothing. Just like secondhand smoke, so-called take-home asbestos is a real threat to your health and your life.
If you or a loved one has been affected by the devastating effects of asbestos exposure and mesothelioma, you may be able to recover damages from those responsible. There’s not yet a cure for mesothelioma, but monetary compensation can help pay for the treatments needed to improve your quality of life. Please contact Heard, Robins, Cloud & Black, LLP, today at (800) 499-1797 to arrange your complimentary private consultation with one of our Houston mesothelioma attorneys.
Heard Robins Cloud & Black LLP
2000 West Loop South, Suite 2200 Houston, TX 77027
(713) 650-1200 | Toll free (800) 499-1797
கணினி வைரஸ்கள்... மூன்றாம் உலகப்போரில் வல்லரசுகளின் ஆயுதம் இதுதானா?
March 12, 2018மூன்றாம் உலகப்போர் போல ஒன்று துவங்க இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது போர்க்களத்தில் நடைபெறாது. எதிரிகள் யாரென்று கணிக...
இன்றும் சில வல்லரசு நாடுகளுக்கு அனைத்து நாடுகளையும் தன் நிழலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் போர் என்று வந்தால் இரு நாடுகளுக்கும் ஏற்படும் அழிவு மிகக் கடுமையாக இருக்கும் என்பதை எண்ணி அமைதி காக்கின்றன. ஆனால், மறைமுகமாக வளர்ந்துவரும் நாட்டை வீழ்த்த என்ன செய்ய வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அழிப்பது. இது நவீன யுகம். பொருளாதாரத்தை அழிக்கப் பெரிதாகவெல்லாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. ஒரு கம்ப்யூட்டார் வைரஸே ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைக்கப் போதுமானதாக இருக்கிறது. அப்படி ஒரு தாக்குதல்தான் ஈரானின் மீது நடத்தப்பட்டது (படுகிறது).
அனைத்து நாடுகளுக்குமே அரபு நாடுகளின் மீது ஒரு கண் உண்டு. வேறு எந்தவிதமான இயற்கை வளங்களும் இல்லாத நிலையிலும், எண்ணெய் வளங்களை வைத்தே அவை பொருளாதாரத்தில் திமுதிமுவென வளர்ந்து நிற்கின்றன. உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதே கச்சா எண்ணெய்யாகத்தான் இருக்கிறது. இது யாருடைய கண்களையோ உறுத்த ‘ஸ்டக்ல்நெட்’ (Stuxnet) என்ற வைரஸ் ஈரான் நாட்டின் பல ஆலைகளுக்குள்ளும் புகுத்தப்பட்டது. இந்த வைரஸின் முக்கிய இலக்குகளே ‘ப்ரோக்கிராமபிள் லாஜிக் கன்ட்ரோலர்களை’ (programmable logic controller) தாக்கி அதன் செயல்களை முடக்குவதுதான். பெரும்பாலான ஆலைகள் இதைக்கொண்டு தான் இயங்குகின்றன. இந்த பி.எல்.சி களின் வேலையே ஆலைகளில் இருக்கும் இயந்திரங்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பிப்பதுதான். ஈரான் நாட்டில் இயங்கிவரும் அனைத்து எண்ணெய் ஆலைகளிலும் இந்தத் தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த வைரஸை அதில் செலுத்துவதன் மூலம் அந்த இயந்திரங்களின் செயல்பாடுகளை இந்த வைரஸினால் கட்டுப்படுத்த முடியும். அப்படிதான் மெதுவாகச் சுழலும் ‘சென்ட்ரிப்யூஜ்’களை (centrifuge) சராசரிக்கும் அதிகமாகச் சுற்ற வைத்துப் பாதிப்புகளை ஏற்படுத்தியது இந்த வைரஸ்.
மற்றுமொரு பிரச்னை என்னவென்றால் இந்த வைரஸ் தாக்கியிருக்கிறது என்று தாக்கப்பட்டிருக்கும் கணினி அமைப்பில் கண்டுபிடிக்க முடியாது. இந்த வைரஸ் 2010-ம் ஆண்டே தன் நாசவேலையைத் துவக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்துதான் இந்த நாச வேலையை ஈரானுக்கு எதிராகச் செய்தன எனச் சொல்லப்படுகிறது. எனினும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இதனைத் தொடர்ந்து மறுத்து வருகின்றன. இந்த வைரஸ்தான் உலகில் கம்ப்யூட்டர் கோடிங்காலேயே செய்யப்பட்ட முதல் ஆயுதம். இந்த வைரஸினால் இது வரை ஆறு நாடுகளே மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அதில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். ஈரானில் அது 60 சதவிகிதம் பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. அமெரிக்கா ஆறாவது இடத்திலும் பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும் உள்ளன.
மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று நடக்கும் என்றால் அதன் தொடக்கம் இணையத்தின் மூலமாகத்தான் இருக்கும். டெக்னாலஜியைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பது புலி வாலைப் பிடிப்பது போன்றது. யார் பிடித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை, யாரைக் கடிக்கப்போகின்றது என்பதும் தெரியவில்லை.
மோடி தயவால் ஆர்எஸ்எஸ் 30 சதவிகிதம் வளர்ச்சி ! –
March 12, 2018பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் 30 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் ஆண்டறிக்கையில் குறிப...
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா நாக்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதிலும் உள்ள அதன் நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் ஆண்டறிக்கையில் நாட்டின் 95 சதவிகித பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் இருப்பதாகத் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. நாகாலாந்து, மிசோரம் மற்றும் காஷ்மீர் ஆகியவற்றின் சில பகுதிகளில் மட்டும் ஆர்எஸ்எஸ் இன்னும் பரவவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் தனது தொண்டர்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் ‘ஷாகா’ எனும் பயிற்சிகள் அல்லது கூட்டங்கள் அன்றாடம் நடத்துகிறது. இது தற்போது 37,190 இடங்களில் 58,976 ஷாகாக்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்பதற்கு இருமாதங்கள் முன்பாக கடந்த மார்ச் 2014-ல் 29,624 இடங்களில் 44,982 ஷாகா பயிற்சிகள் நடைபெற்று வந்தன. இதன் எண்ணிக்கை அடுத்த ஒரு வருடத்தில் 33,223 இடங்களில் ஷாகா பயிற்சிகள் 51,332 என உயர்ந்தன. 2016-ல் 36,867 இடம் மற்றும் 56,859 பயிற்சி, கடந்த மார்ச்சில் 36,729 இடம் மற்றும் 57,165 ஷாகாக்கள் மீண்டும் உயர்ந்துள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வகுப்பினர் இடையே ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஆட்சியில் சரிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2009 முதல் 2010 ஆம் ஆண்டின் சுமார் 4000 வரை ஷாகாக்கள் குறைந்தன எனவும், இந்த சரிவு நிலை அதற்கு முன்பும் இருந்ததாகவும் அதன் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, பாஜக தலைமையிலான பிரதமர் மோடியின் ஆட்சி காரணமாக ஆர்எஸ்எஸ் வளர்ச்சி பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த வளர்ச்சி விகிதம் 30 சதவிகிதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நாக்பூர் கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று பொதுச்செயலாளரான பைய்யா ஜோஷி மீண்டும் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மூன்று நாள் ஆர்எஸ்எஸ் கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது.
அமைதி காக்கும் ஸ்ரீதேவியின் தங்கை... துபாயில் அக்காவுடன் இருந்தவர் எங்கே சென்றார்?
March 12, 2018ஸ்ரீதேவி இறக்கும்போது அவருடன் துபாயில் இருந்த அவரின் தங்கை ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. நாத்தனார் மகன் மோஹித் மர்வாவி...
நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார் நடிகை ஸ்ரீதேவி. திருமணம் முடிந்து பலரும் மும்பை திரும்பியபோது அவரும், அவரின் தங்கை ஸ்ரீலதாவும் துபாயிலேயே இருந்தனர்.
கடந்த 24ம் தேதி ஸ்ரீதேவி மது போதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
ஸ்ரீதேவியின் தங்கை ஏன் அக்காவின் இறுதிச் சடங்கு, பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள பாலிவுட்காரர்கள் ஆர்வமாக உள்ளனர். ஸ்ரீலதா மிஸ்ஸானது பலருக்கும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
ஸ்ரீதேவி விஷயம் பற்றி யாரிடமும் பேசாமல், யார் கண்ணிலும் படாமலும் இருக்குமாறு ஸ்ரீலதாவிடம் குடும்பத்தார் கூறியுள்ளனர் என்று கபூர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலதாவை ஏன் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர் என்பது புரியவில்லை. சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் பங்களாவை ஸ்ரீலதா மற்றும் அவரின் கணவர் சதீஷின் பெயருக்கு எழுதிக் கொடுக்க முடிவு செய்துள்ளனர் என்று கபூர் குடும்பத்திற்கு நெருக்கமான நபர் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவியின் திடீர் மரணம் குறித்து துபாய் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஸ்ரீலதா அமைதி காப்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.