மோடி தயவால் ஆர்எஸ்எஸ் 30 சதவிகிதம் வளர்ச்சி ! –

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் 30 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் ஆண்டறிக்கையில் குறிப...

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் 30 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா நாக்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதிலும் உள்ள அதன் நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் ஆண்டறிக்கையில் நாட்டின் 95 சதவிகித பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் இருப்பதாகத் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. நாகாலாந்து, மிசோரம் மற்றும் காஷ்மீர் ஆகியவற்றின் சில பகுதிகளில் மட்டும் ஆர்எஸ்எஸ் இன்னும் பரவவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தனது தொண்டர்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் ‘ஷாகா’ எனும் பயிற்சிகள் அல்லது கூட்டங்கள் அன்றாடம் நடத்துகிறது. இது தற்போது 37,190 இடங்களில் 58,976 ஷாகாக்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்பதற்கு இருமாதங்கள் முன்பாக கடந்த மார்ச் 2014-ல் 29,624 இடங்களில் 44,982 ஷாகா பயிற்சிகள் நடைபெற்று வந்தன. இதன் எண்ணிக்கை அடுத்த ஒரு வருடத்தில் 33,223 இடங்களில் ஷாகா பயிற்சிகள் 51,332 என உயர்ந்தன. 2016-ல் 36,867 இடம் மற்றும் 56,859 பயிற்சி, கடந்த மார்ச்சில் 36,729 இடம் மற்றும் 57,165 ஷாகாக்கள் மீண்டும் உயர்ந்துள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வகுப்பினர் இடையே ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஆட்சியில் சரிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2009 முதல் 2010 ஆம் ஆண்டின் சுமார் 4000 வரை ஷாகாக்கள் குறைந்தன எனவும், இந்த சரிவு நிலை அதற்கு முன்பும் இருந்ததாகவும் அதன் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, பாஜக தலைமையிலான பிரதமர் மோடியின் ஆட்சி காரணமாக ஆர்எஸ்எஸ் வளர்ச்சி பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த வளர்ச்சி விகிதம் 30 சதவிகிதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நாக்பூர் கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று பொதுச்செயலாளரான பைய்யா ஜோஷி மீண்டும் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மூன்று நாள் ஆர்எஸ்எஸ் கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive