ரஜினியை கடுமையாக விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். கோவையில் செய்தியாளர்...

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது கமல் கூறுகையில் தண்ணீர் சேமிப்பில் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் .என்றார்.

ரஜினி காவிரி மேலாண்மை பிரச்சணை தொடர்பாக பேசாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்கப்பட்டதற்கு, அவர் காவிரி விவகாரம் என்றில்லை பல விஷயங்களில் பதில் சொல்ல மறுக்கிறார் என கமல் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்குவதற்கு முன்பு கமல்ஹாசன் தனக்கு பிடித்த ரஜினியிடம் ஆசி பெற்று செல்வதாக அவரை போயஸ் கார்டனில் சந்தித்தார்.

மேலும் பிக்பாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போதே அரசியலில் இறங்குவது குறித்து ரஜினியிடம் ரகசியமாக தெரிவித்திருக்கிறேன் என கமல் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive