"திமுகவுக்கு இரண்டாமிடம், அதிமுகவுக்கு மூன்றாமிடம்" - பிரமிக்க வைக்கும் சொத்துமதிப்பு!

அ.தி.மு.க-வை விட தி.மு.க அதிகளவு சொத்து வைத்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. "Association for Democratic Reforms" என்ற அமைப்பு ...

அ.தி.மு.க-வை விட தி.மு.க அதிகளவு சொத்து வைத்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

"Association for Democratic Reforms" என்ற அமைப்பு சமீபத்தில் தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பை வெளியிட்டது. அதில், ரூ.894 கோடி சொத்துக்களுடன் பா.ஜ.க முதலிடம் பிடித்திருந்தது. இதேபோல் பா.ஜ.க-வுக்கு சளைத்தது அல்ல என்பது போல் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸும், ரூ.759 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடம் பிடித்திருந்தது. இதே அமைப்பு தற்போது மாநில கட்சிகளின் சொத்துமதிப்பு குறித்து நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது.  2011 - 12 முதல் 2015 - 16 ஆண்டு வரை சுமார் 22 கட்சிகளின் சொத்துக்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி, "முலாயம் சிங் ஆரம்பித்து தற்போது அவரது மகன் தலைவராக உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி ரூ.634.96 கோடி சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளது. 2011 - 12 ஆண்டு 212 கோடி ரூபாயாக இருந்த இக்கட்சியின் சொத்துமதிப்பு 4 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த பட்டியலில் அடுத்த இரு இடங்களை தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் பிடித்துள்ளன. ரூ.265.23 கோடி சொத்து மதிப்புகளுடன் தி.மு.க இரண்டாமிடமும், ரூ.224.87 கோடி சொத்து மதிப்புடன் அ.தி.மு.க மூன்றாமிடமும் பெற்றுள்ளது. 2011 - 12 ஆண்டு காலகட்டத்தில் முறையே ரூ.89.32 கோடி மற்றும் ரூ.88.21 கோடியாக இக்கட்சிகளின் சொத்து மதிப்பு 4 ஆண்டுகளில் பிரமிக்க வைக்கும் வகையில் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான விஜயகாந்தின் தே.மு.தி.க இப்பட்டியலில் 10-ம் இடம் பிடித்துள்ளது. முன்னதாக 2012-ம் ஆண்டு ரூ.9.21 கோடியாக தே.மு.தி.கவின் சொத்துமதிப்பு சரிந்து 2016-ல் ரூ.4.45 கோடியாக உள்ளது. இதேபோல், தெலுங்குதேசம் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன. இதற்கிடையே, 22 லட்சத்துடன் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் பல...

0 comments

Blog Archive