அனுபவம்
நிகழ்வுகள்
முடிவு காலத்தை நோக்கி திலீப்! நடிகர் சங்கத்திலிருந்தும் நீக்கம்
July 11, 2017
நடிகை பாவனாவின் பாலியல் துன்புறுத்தல் வழக்கு சூடு பிடித்துவிட்டது. நடிகை என்பவள் இமேஜ் பார்ப்பாள். போலீசுக்கு போக மாட்டாள் என்று நம்பி செய்த ஒரு கெட்ட காரியம், இன்று சிறை வரைக்கும் கொண்டுபோய் தள்ளிவிட்டது கேரளாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப்பை.
தனது மனைவி மஞ்சு வாரியரை தன்னிடமிருந்து பிரிக்க காரணமாக இருந்தவர் பாவனாதான் என்று நினைத்த திலீப், பல்சர் சுனில் என்ற ரவுடியை தூண்டிவிட்டு அவரை கேங் ரேப்பில் ஈடு பட வைத்தார் என்பதுதான் வழக்கு. இதில் பலமான ஆதாரங்களை கைப்பற்றிய போலீஸ், திலீப்பின் மித மிஞ்சிய செல்வாக்கையும் பண பலத்தையும் தாண்டி அவரை கைது செய்திருப்பது போலீஸ் துறையின் மீதே பெருத்த மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று மாலை கைது செய்யப்பட்ட திலீப் நீதிமன்ற காவலில் 14 நாட்கள் அடைக்கப்பட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இன்று கூடிய மலையாள சினிமா நடிகர்கள் சங்கம் திலீப்பை நடிகர் சங்கத்திலிருந்தே துரத்தியடித்திருக்கிறது. மம்முட்டி மோகன்லால் உள்ளிட்ட பெரும் நடிகர்களின் இந்த முடிவை கேரள மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். நான் குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன் என்று திலீப் பேட்டி கொடுத்துவிட்டு சிறைக்கு சென்றாலும், இவரைப் போன்ற ஹீரோக்களுக்கு இமேஜ் முக்கியமல்லவா? இவ்வளவு பெரிய குற்ற வழக்கில் உள்ளே போனவருக்கு இந்த சமூகம் என்ன பொக்கே கொடுத்தா கவுரவிக்கப் போகிறது?
வெளியே வரும் திலீப், இன்னொரு என்.எஸ்.கே, மற்றும் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை பிரதிபலிப்பார் என்றே நம்புவோம்!
பின்குறிப்பு- திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவன் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார். அவரையும் போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது.

0 comments