ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்

தொலைக்காட்சியில் தற்போதெல்லாம் பிரபலமானால் போதும், வெள்ளித்திரை சென்று ஜொலித்து விடலாம். அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில...

தொலைக்காட்சியில் தற்போதெல்லாம் பிரபலமானால் போதும், வெள்ளித்திரை சென்று ஜொலித்து விடலாம். அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

அதிலும் ஜீ தொலைக்காட்சியில் வரும் ஒரு பாடல் நிகழ்ச்சி ரசிகர்களிடம் செம்ம வரவேற்பில் உள்ளது, அதில் பாடும் ரமணியம்மாள் என்ற வயதானவருக்கு ரசிகர்கள் அதிகம்.

இவரை கண்டிப்பாக என் இசையில் பாட வைக்கின்றேன் என யுவன் ஷங்கர் ராஜா வாக்கு கொடுத்தார், அதை தொடர்ந்து சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் டி.இமான் கலந்துக்கொண்டார்.

அப்போது ரமணியம்மாள் தாய் பாசம் மிகுந்த ஒரு பாடலை அவர் முன்பு பாட, ஒரு கட்டத்தில் இமான் கண் கலங்கிவிட்டார்.

இவர் பாடிய பாடல் தன் தாயை நினைவுப்படுத்தியது, என மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார், அந்த தருணத்தில் அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கண் கலங்கினார்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive