ரஜினி கட்சியில் சவுந்தர்யா? பீதி கிளப்புறாங்களே பெருமாளு!

ரஜினியை தாறுமாறாக ரசித்த கட்சிக்காரர்களில் பலர், மைக்ராஸ்கோப் கண்ணாடி போட்டுக் கொண்டு அவரை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது நொள்ளை, இத...

ரஜினியை தாறுமாறாக ரசித்த கட்சிக்காரர்களில் பலர், மைக்ராஸ்கோப் கண்ணாடி போட்டுக் கொண்டு அவரை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது நொள்ளை, இது நொட்டை என்று அடுக்கடுக்காக அவிழ்த்துவிடும் ஆவேசப் பேச்சுகள் எதிலும் நிதானம் இல்லை என்பது மட்டும் நிச்சயம். ‘முதல்ல தமிழை சரியா பேசக் கத்துக்கங்க’ என்று மன்சூரலிகான் மாதிரியான ஆட்கள் பேசுகிற அளவுக்கு நிலைமை படு மோசம். (அந்த தமிழ் புடிச்சுதானேய்யா இத்தனை காலம் அவரை சூப்பர் ஸ்டாரா வச்சுருக்கு தமிழ்நாடு?)

இந்த எரிச்சல்களில் இன்னும் கொஞ்சம் எண்ணை ஊற்றுவது போல வந்திருக்கிறது ஒரு புது செய்தி. ரஜினி ஆரம்பிக்கப் போகும் புதுக்கட்சியில் அவரது மகள் சவுந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு தரப்பட இருக்கிறதாம். நேற்றே மதுரை நகரில் தனுஷ் படத்தை போட்டு பெரிய போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார்கள். ‘வருங்கால அரசியல் வாரிசே…’ என்பதுதான் போஸ்டரின் தத்துவம்.

இந்த லட்சணத்தில் சவுந்தர்யாவுக்கு கட்சிப்பதவி கொடுத்தால், குடும்ப கட்சி என்கிற இமேஜ் வளரும்போதே வந்துவிடாதா? அதுமட்டுமல்ல… ரஜினியை கூறு போட்டு விற்பதில் அவரது குடும்பத்திற்கு இருக்கிற வியாபார நுணுக்கத்தை ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறது நாடு. இதில் ரஜினியே ரஜினி கட்சிக் கூட்டத்தில் பேசினா எவ்வளவு கொடுப்பீங்க? என்று ஆரம்பித்தால் என்னாவது?

இப்படியெல்லாம் பீதி கிளம்புது. பார்த்து செய்ங்க தலைவா?

மேலும் பல...

0 comments

Blog Archive