அனுபவம்
நிகழ்வுகள்
சர்க்கரை நோய், புற்றுநோய் வரவேகூடாதுனு நினைக்கிறீங்களா?.. இந்த ஒருகப் சூப் போதும்
March 19, 2018
பப்பாளியின் அனைத்து பகுதிகளிலும் நன்மைகள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பப்பாளியின் வேர், இலைகள், பழம், பூ என்ற அனைத்திலும் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. நம் அனைவருக்குமே பப்பாளிப் பழத்தின் நன்மைகளைப் பற்றித் தெரியும். ஆனால் அதன் பூவை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பலருக்கு பப்பாளியின் பூவை சாப்பிடலாம் என்பதே இக்கட்டுரையைப் பார்த்த பின்பு தான் தெரிந்திருக்கும்.
ஒரு 100 கிராம் பப்பாளி பூவில் புரோட்டீன் 2.6 கிராம், கார்போஹைட்ரேட் 8.1 கிராம், கால்சியம் 290 மி.கி, பாஸ்பர் 113 மிகி, இரும்புச்சத்து 4.2 கிராம், வைட்டமின் சி 23.3 மி.கி உள்ளது. என்ன தான் பப்பாளி பூவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அதன் கசப்புத் தன்மையால் பலரும் இதை சாப்பிட தவிர்க்கலாம். ஆனால் பப்பாளிப் பூவினால் கிடைக்கும் நன்மைகளைத் தெரிந்து கொண்டால், என்ன தான் கசப்பாக இருந்தாலும், அதை மறந்து சாப்பிடுவீர்கள்.
புற்றுநோயைத் தடுக்கும்
பப்பாளிப் பூவில் உள்ள ப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், ப்ரீ-ராடிக்கல்கள் உடலினுள் நுழைந்து பல்வேறு புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தைத் தடுக்கும். மேலும் பப்பாளிப் பூவில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை சீராக பராமரித்து, உடலின் பல்வேறு செயல்பாட்டையும் சிறப்பாக வைக்கும்.
சர்க்கரை நோயை சரிசெய்யும்
பப்பாளிப் பூ சர்க்கரை நோயாளிகளின் உடலில் குறைவாக உள்ள இன்சுலின் அளவிற்கு உதவும். எந்த ஒரு ஆராய்ச்சியிலும், பப்பாளிப் பூ சர்க்கரை நோயை சரிசெய்யும் என கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், பழங்காலத்தில் மக்கள், தங்களது இரத்த சர்க்கரை அளவை பப்பாளிப் பூ சாப்பிட்டு தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். வேண்டுமானால், பப்பாளிப் பூவை சாப்பிட்டுப் பாருங்கள். இதனால் நிச்சயம் உங்கள் உடலினுள் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
எடை குறைய உதவும்
பப்பாளிப் பூவில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை போதுமான அளவில் உள்ளது. பப்பாளிப் பூ ஒருவரது உடல் எடைக் குறைக்க உதவியாக இருக்கும். எனவே தினமும் சிறிது பப்பாளிப் பூவை சாப்பிட்டு வாருங்கள். அதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். இதனால் நிச்சயம் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
மாரடைப்பைத் தடுக்கும்
முன்பே கூறியது போல், பப்பாளிப் பூவில் இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சிறப்பாக வைக்கும் உட்பொருட்கள் ஏராளமான அளவில் உள்ளது. ஒருவது உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தாலே, இதயம் ஆரோக்கியமாக இருந்து, மாரடைப்பு மற்றும் இதர இதய நோயின் அபாயம் தடுக்கப்படும்.
பப்பாளிப் பூவை எப்படி சாப்பிடுவது?
பப்பாளிப் பூ மிகவும் கசப்பாக இருக்கும். இந்த கசப்பு இல்லாமல் பப்பாளிப் பூவை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
பப்பாளிப் பூ - 250 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 3 பற்கள்
வரமிளகாய் - 2
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
பப்பாளிப் பூவை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பப்பாளிப் பூவில் உள்ள கசப்பை நீக்க, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பப்பாளிப் பூ மற்றும் புளிச்சாறு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பூண்டு, வரமிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் அந்த பப்பாளிப் பூவுடன் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து நன்கு ஒரு கொதி விட்டு இறக்கி, சூப் போன்று குடியுங்கள்.

0 comments