மெட்டிஒலி புகழ் செல்வத்திற்குள் இப்படியொரு சோகமா?

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று செம ஹிட்டாகிய சீரியல் தான் மெட்டிஒலி. இதனை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. இந்த சீர...

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று செம ஹிட்டாகிய சீரியல் தான் மெட்டிஒலி. இதனை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

இந்த சீரியலில் வந்த செல்வம் என்ற காதாபாத்திரத்தில் நடித்த நட்சத்திரத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தனது நடிப்பினால் அனைவரையும் கட்டிப்போட்டவர் தான் இவர்....

நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவரது உண்மையான பெயர் விஸ்வநாதன். கல்லூரி படிப்பினை முடித்த இவர் ஒரு சில சிறிய சிறிய நாடகங்கள் நடித்து வந்துள்ளார்.

இதன்மூலமாக மெட்டி ஒலி சீரியலுக்குள் நுழைந்த இவர் மக்கள் மனதில் சிறந்த இடத்தினையும் பிடித்துள்ளார். சொந்தமாக சென்னையில் வீடு வைத்திருக்கும் இவர் தொழிலதிபரின் மகளை திருமணம் செய்துள்ளார். தற்போது 10 வயது மகனும் உள்ளார்.

மெட்டிஒலி சீரியலுக்குப் பின்பு நடிப்பதற்கு இடைவெளி விட்ட இவர் மீண்டும் பொண்ணூஞ்சல் சீரியலில் நடித்து மீண்டும் புகழ்பெற்றார். அதன்பின்பு சினிமா வாய்ப்பிற்கு எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே எஞ்சியது.

தற்போது மனைவியுடன் சேர்ந்து கம்பெனி ஒன்றினை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சீரியல்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட செல்வத்திற்கு சினிமாவில் எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கவில்லை என்ற மனவருத்தத்தில் இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive