வதந்திகளால் கவலையில் இருக்கிறேன் - கமல் வருத்தம் !

சமீபகாலமாக தமிழ்நாடு மக்கள் சமூகவலைத்தளத்தில் வரும் செய்தி உண்மை என்று நம்பி அந்த விஷயத்தை பரப்பி வருகின்றனர். சமீபத்தில் கூட குழந்தை கடத்த...

சமீபகாலமாக தமிழ்நாடு மக்கள் சமூகவலைத்தளத்தில் வரும் செய்தி உண்மை என்று நம்பி அந்த விஷயத்தை பரப்பி வருகின்றனர். சமீபத்தில் கூட குழந்தை கடத்த வந்தவர்கள் என்று கூறி திருவண்ணாமலையில் நடந்த தாக்குதலில் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து கூட காவல்துறை சமூகவலத்தில் வரும் விஷயத்தை நம்பவேண்டாம் என்று கூறினர், இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில், "வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது.

மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல் துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive