தமிழ்ராக்கர்சில் இரும்புத்திரை இல்லை! என்னப்பா டீல் இது?

‘கொத்தா பின் மண்டைய புடிச்சு லாந்துறனா இல்லையா பாரு?’ என்று வீராவேசமாக பேசி வந்த விஷால் மற்றும் ஞானவேல்ராஜா குரூப் தன் கூட்டணியை உடைத்துக் ...

‘கொத்தா பின் மண்டைய புடிச்சு லாந்துறனா இல்லையா பாரு?’ என்று வீராவேசமாக பேசி வந்த விஷால் மற்றும் ஞானவேல்ராஜா குரூப் தன் கூட்டணியை உடைத்துக் கொண்டது நல்லதா? கெட்டதா? அதென்னவோ தெரியவில்லை. அந்த சம்பவம் நடந்த நாளில் இருந்தே, திருட்டு விசிடி பற்றி பெரிதாக பேட்டிகள் வரவில்லை தயாரிப்பாளர் சங்க ஏரியாவிலிருந்து.

நடுவில் தன் சேவையை நிறுத்துவதாக இல்லை தமிழ்ராக்கர்சும். சுட சுட ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ படத்தை வெளியிட்டிருந்தார்கள். நடுவில் ஸ்டிரைக் காலத்தில் படம் இல்லாமல் திணறிய அந்த திருட்டுக்கும்பல், அதற்கப்புறம் வந்த படங்களை விட்டு வைக்குமா என்ன? ஆனால் சில நாட்களாக தமிழ்ராக்கர்ஸ் மீதே கரப்ஷன் சொல்லி கண்ணீர் வடிக்கிறது திருட்டு விசிடி ரசிகர் கூட்டம். ஏன்?

அண்மையில் திரைக்கு வந்து ஆஹா ஓஹோ என்று விமர்சகர்களால் கொண்டாடப்பட்டு வருகிற படம் ‘இரும்புத்திரை’. இதையடுத்து மக்களும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்து வருகிறார்கள். இந்த நேரத்தில் ஆட்டோமேடிக்காக திருட்டு விரல்கள் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை தட்டுமல்லவா? தட்டினால் அங்கு தட்டுப்படவே இல்லை இரும்புத்திரை. அண்மையில் திரைக்கு வந்த எல்லா படமும் இருக்க, இது மட்டும் ஏன் இல்லை என்று புலம்புகிறார்கள் சோஷியல் மீடியாவில்.

‘விஷாலும் தமிழ்ராக்கர்சும் தனியாக யாருக்கும் தெரியாமல் ஒரு டீல் போட்டுட்டாங்களா என்ன?’ என்ற குரலும் கேட்காமல் இல்லை. என்னவோ இருக்கு. அது என்னன்னுதான் இன்னும் தெரியாம இருக்கு!

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog