டிராபிக் ராமசாமி - திரை விமர்சனம்

தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என வாய்ப்பேச்சோடு நிற்காமல் களத்தில் இறங்கி வேலை செய்பவரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை வைத்து அவரின் பெ...

தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என வாய்ப்பேச்சோடு நிற்காமல் களத்தில் இறங்கி வேலை செய்பவரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை வைத்து அவரின் பெயரிலேயே வெளியாகியுள்ளது இந்த படம். பிரபல இயக்குனரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் டிராபிக் ராமசாமியாக நடித்துள்ளார்.

கதைக்களம்:

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆரம்பிக்கிறது படம். அந்த புத்தகத்தை நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் அமர்ந்து படித்து அவர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை நினைத்து பார்ப்பது போல விரிகிறது கதை.

சமூகத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் போலீஸ், அரசியல்வாதிகள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் கோர்ட்டுக்கு இழுத்து மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடுகிறார். அதனால் அவரை தீர்த்துக்கட்ட நினைக்கும் எதிரிகளிடமிருந்து சில அடி-உதைகளை பரிசாக பெறுகிறார்.

இருப்பினும் சோர்ந்துவிடாமல், அரசால் தடை செய்யப்பட்டும் இன்னும் சட்டவிரோதமாக பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மீன் பாடி வண்டிகள் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஒரு வழக்கை தொடுக்கிறார்.

அதில் பல பெரிய அரசியல் தலைகள் சிக்க, அந்த கேசில் ராமசாமி ஜெயித்தார் இல்லையா என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

டிராபிக் ராமசாமி என்றால் வெறும் போஸ்டர்/பேனர்களை கிழிப்பவர், பொதுநல வழக்கு தொடர்பவர், அடிக்கடி தற்கொலை மிரட்டல் விட்டு போராட்டம் நடத்துபவர் என்பதோடு மட்டும் நில்லாமல் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், நியாயத்திற்காக போராடியதால் அவர் அனுபவித்த துன்பங்கள் என அனைத்தையும் திரையில் கொண்டுவந்துள்ளனர்.

ஆனால் படம் கமெர்சியலாக இருக்கவேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்ட சில கதாப்பாத்திரங்கள், சீன்கள் - பார்ப்பவர்களுக்கு சலிப்பை தான் எற்படுத்துகின்றன.

வில்லன்களாக வரும் இமான் அண்ணாச்சி, மோகன் ராமன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் அழுத்தமாக இல்லாதது படத்திற்கு பின்னடைவு. சில கோர்ட் சீன்கள் ஏதோ காமெடி ஷோ போலவே இருந்தன.

அங்கும் இங்கும் அரசியல் கருத்துக்களை சேர்க்க முற்பட்ட இயக்குனரால் இந்த படம் ஒரு முழுமையான வாழ்க்கை வரலாற்று படமாக இல்லாமல் போய்விட்டது என்றும் சொல்லலாம்.

கிளாப்ஸ்:

- டிராபிக் ராமசாமியின் ரோலில் கச்சிதமாக பொருந்தி நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர்.

பல்ப்ஸ்:

- எதார்த்தமாக இல்லாமல் போன சீன்கள்.

- அழுத்தம் இல்லாத நெகட்டிவ் கதாபாத்திரங்கள்.

டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் இன்னும் சிறப்பாகவே பதிவு செய்திருக்கலாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive