அஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர்! ஆனால் அவர் ஷங்கர் இல்லை!

அஜீத் விஜய்யோட அடுத்தப்படம் என்னப்பா…? என்று சோஷியல் மீடியாவில் துழாவிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு, ஒரு க்ளுவும் கிடைக...

அஜீத் விஜய்யோட அடுத்தப்படம் என்னப்பா…? என்று சோஷியல் மீடியாவில் துழாவிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு, ஒரு க்ளுவும் கிடைக்காதது பெரும் வருத்தமே. கருவாடா இருந்தாலென்ன? கத்திரிக்காயா இருந்தாலென்ன? வரும்போது வரட்டும் என்கிற அலட்சியம் இவ்விரு ரசிகர்களுக்குமே இல்லை. வரவும் வராது…

இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத தகவல். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத், அஜீத்திற்கு ஒரு கதை சொல்லி கவிழ்த்தாரல்லவா? அந்தப்படத்தைக் கூட போனிக்கபூர் தயாரிப்பதாக இருந்ததே… அங்குதான் புதிய திருப்பம்.

திடீரென வினோத்தை அழைத்தாராம் விஜய். எனக்கும் ஒரு கதை சொல்லுங்க என்று கேட்க, புல்லரிக்கும்படி இவருக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார் வினோத். இந்தப்படம் பண்றோம். அதுவும் உடனே… என்று விஜய் வாக்குறுதி கொடுக்க… நிலைமை தர்மசங்கடம். முதலில் கதை கேட்டு ஓ.கே சொன்ன அஜீத்தா? உடனே தயாராகுங்க என்று கேட்கிற விஜய்யா? தடுமாறிப் போன வினோத், எதுக்கும் அஜீத் சார்ட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன் என்றாராம்.

“ஒரு டென்ஷனும் இல்ல. முதல்ல விஜய் படத்தை பண்ணிட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்” என்றாராம் அஜீத்.

அடிச்சுக்குற ரசிகர்களே… இந்த பெருந்தன்மையை கவனிச்சீங்களா?

மேலும் பல...

0 comments

Blog Archive