மீண்டும் முருங்கை மரம் ஏறிய வடிவேலு! வழுக்கு மரங்களான தேக்கு மரங்கள்!

வடிவேலுவுக்கும் இயக்குனர் ஷங்கருக்குமான பஞ்சாயத்து ஊரறிந்த கலாட்டா! சுமார் ஏழரை கோடி ரூபாய் நஷ்டம். அதை வாங்கிக் கொடுங்கள் என்று ஷங்கர் தயா...

வடிவேலுவுக்கும் இயக்குனர் ஷங்கருக்குமான பஞ்சாயத்து ஊரறிந்த கலாட்டா! சுமார் ஏழரை கோடி ரூபாய் நஷ்டம். அதை வாங்கிக் கொடுங்கள் என்று ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்ததும் தெரிந்த விஷயம்தான். அப்படியும் அடங்காத வடிவேலு என்னென்னவோ மாய்மாலம் செய்தார்…செய்தும் வருகிறார். அதில் ஒன்றுதான் இது.

சில தினங்களுக்கு முன் லைக்கா நிறுவனத்தின் முதலாளிக்கு ஒரு போன். எதிர்முனையில் வடிவேலு. “நீங்களும் ஷங்கரும் சேர்ந்துதானே 24 ம் புலிகேசி தயாரிக்கிறீங்க? அந்த ஒப்பந்தத்தை ரத்து பண்ணுங்க. நீங்க உங்களோட சிங்கிள் பேனர்ல படத்தை தயாரிச்சா என் முழு ஒத்துழைப்பும் உண்டு” என்றாராம்.

கறக்கிற பசுவை விட்டுட்டு, கன்னுக்குட்டிய புடிச்சு என்ன லாபம்? யோசித்து சொல்வதாக போனை கட் பண்ணினாராம் முதலாளி!

பின்குறிப்பு- இது குறித்து பேசுவதற்காக சென்ற தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் வடிவேலு நடந்து கொண்ட விதம் அசிங்கமானது. அவமானத்திற்குரியது என்று கொந்தளிக்கிறது சங்கம். அம்மா காலத்திலேயே அடங்காம சிலிர்த்தவர். இந்த ‘சும்மா’ காலத்திலே சும்மாவா இருப்பாரு?

மேலும் பல...

0 comments

Blog Archive