கருப்பு மிளகை இப்படி சாப்பிடுங்க! கரையாத தொப்பையும் கரைஞ்சிடும்?

கருப்பு மிளகு நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இதுவரைக்கும் கருப்பு மிளகு சளிக்கு, தொண்டை புண் இவற்றிற்கு நல்லது என்று கேள்வி ப...

கருப்பு மிளகு நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இதுவரைக்கும் கருப்பு மிளகு சளிக்கு, தொண்டை புண் இவற்றிற்கு நல்லது என்று கேள்வி பட்டிருக்கோம்.

ஆனால் இந்த கருப்பு மிளகை கொண்டு நம் எடையை கூட குறைக்க முடியுமாம்.

எடை குறைப்பு
இந்த கருப்பு மிளகை நீங்கள் உள்ளே எடுத்துக் கொண்டோ அல்லது வெளியே பயன்படுத்தி கூட எடையை குறைக்க இயலும். இந்த கருப்பு மிளகை சில வகைகளில் உணவுடன் கலந்து கீழ்வருமாறு சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நாள் கரைக்க முடியாமல் கஷ்டப்பட்ட தொப்பையும் கரைந்து போய்விடும்.

கருப்பு மிளகு டீ
கருப்பு மிளகு டீ உங்கள் எடையை குறைக்க சிறந்த ஒன்று. இதை நீங்கள் எளிதாகவும் தயாரிக்கலாம். இஞ்சி, லெமன், துளசி, க்ரீன் டீ பேக்குகள் அல்லது பட்டை மற்றும் 1/2 - 1 டீ ஸ்பூன் கருப்பு மிளகு பொடி சேர்த்து டீ தயாரிக்கவும். இதை காலையில் சாப்பிடுவதற்கு முன் செய்து வந்தால் எடை குறைவது நிச்சயம்.

கருப்பு மிளகு பானம்
இந்த கருப்பு மிளகை உங்கள் காய்கறிகள் மற்றும் பழ ஜூஸூடன் கலந்து வரலாம். இதன் காரமான சுவை உங்களுக்கு பிடிக்கும். இதை தினமும் குடித்து வருவதால் எடையை குறைப்பதோடு சருமத்திற்கும், குடலுக்கும் ரெம்ப நல்லது.

அப்படியே சாப்பிடலாம்.
நீங்கள் மிளகை நேரடியாகவும் எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு நாள் காலையிலும் 2-3 மிளகை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து அளவுகள்
100 கிராம் கருப்பு மிளகில்
கார்போஹைட்ரேட் - 64.8 கிராம்
நார்ச்சத்து - 26.5 கிராம்
கொழுப்புகள்
மோனோசேச்சுரேட் கொழுப்பு - 1 கிராம்
அன்சேச்சுரேட்டேடு கொழுப்பு - 1 கிராம்
பாலிசேச்சுரேட் கொழுப்பு - 1.1 கிராம்
ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் - 160 மில்லி கிராம்
ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள் - 970 மில்லி கிராம்
கால்சியம் - 437 மில்லி கிராம்
இரும்புச் சத்து - 28.9 மில்லி கிராம்
மக்னீசியம் - 194 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 173 மில்லி கிராம்
பொட்டாசியம் - 1259 மில்லி கிராம்
சோடியம் - 44 மில்லி கிராம்
ஜிங்க் - 1.4 மில்லி கிராம்
மாங்கனீஸ் - 5.6 மில்லி கிராம்
காப்பர் - 1.11மில்லி கிராம்
செலினியம் - 3.1 மைக்ரோ கிராம்
ப்ளூரைடு - 34.2 மைக்ரோ கிராம்
புரோட்டீன் - 11 கிராம்
விட்டமின்கள்
விட்டமின் சி - 21 மில்லி கிராம்
விட்டமின் ஏ - 299 IU
விட்டமின் கே - 164 மைக்ரோ கிராம்
போலேட் - 10 மைக்ரோ கிராம்
நியசின் - 1.1மில்லி கிராம்
கோலைன் - 11.3 மில்லி கிராம்
ரிபோப்ளவின் - 0.2 மில்லி கிராம்
விட்டமின் பி6 - 0.3 மில்லி கிராம்
பீட்டைன் - 8.9 மில்லி கிராம்

மேலும் பல...

0 comments

Blog Archive