பள்ளி மாணவர்களுக்காக ஆவணப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

இயக்குநர் திரு இயக்கத்தில் கல்வி தொடர்பான ஆவணப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில், சி...

இயக்குநர் திரு இயக்கத்தில் கல்வி தொடர்பான ஆவணப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில், சிவகார்த்திகேயன் பள்ளி மாணவர்களுக்கு முன் நின்றுகொண்டு பேசுவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வைரலாக பரவியது. அவருக்கு அருகில் 'சமர்' உள்ளிட்ட படங்களைஇயக்கிய இயக்குநர் திரு நின்று கொண்டிருப்பதுபோல அந்தப் புகைப்படம் இருந்தது.

இந்நிலையில் இயக்குநர் திரு, முதல்முறையாக இந்த புகைப்படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஓர் ஆவணப்படத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஒரு நல்ல காரியத்திற்காக இந்தப் பணியில் இருவரும் இணைந்துள்ளதாகவும், இது குறித்த விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive