பாடகியாக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன் குட்டி மகள்

புதிய படத்தில் தனது 4 வயது மகள் ஆராதனாவை திரையுலகில் அறிமுகபடுத்துகிறார் நடிகர் சிவகார்த்தியேன். ஹீரோவாக கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன...

புதிய படத்தில் தனது 4 வயது மகள் ஆராதனாவை திரையுலகில் அறிமுகபடுத்துகிறார் நடிகர் சிவகார்த்தியேன். ஹீரோவாக கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறியிருக்கும் படம் 'கனா'.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகர், நடிகர் அருண் ராஜா இயக்கும் இப் படத்தில் நடிகை ஜஸ்வர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு திபுநினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இதில், இசையமைப்பாளர் அனிருத் ஒரு நாட்டுப்புற பாடலை பாடியிருக்கிறாராம்.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து 'கனா' படம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 4 வயதுடைய மகள் ஆராதனாவை திரையுலகில் அறிமுகப்படுத்துகிறார்.

படத்தில் ஆராதனா தனது தந்தை சிவகார்த்திகேயன் மற்றும் வைக்கோம் விஜயலட்சுமியுடன் இணைந்து 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலை பாடியுள்ளாராம். இதன் மூலம் ஆராதனா பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

மேலும் பல...

0 comments

Blog Archive