சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடலாமா?

ஆரோக்கியமான காலை உணவுதான் ஒருநாளிற்குத் தேவையான அதிக சக்தியைக் கொடுக்கும். காலை உணவுதான் ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு (10 மணி நேரம்)...

ஆரோக்கியமான காலை உணவுதான் ஒருநாளிற்குத் தேவையான அதிக சக்தியைக் கொடுக்கும். காலை உணவுதான் ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு (10 மணி நேரம்) நாம் உண்ணும் உணவு. அதனால்தான், அதை பிரேக் –ஃபாஸ்ட் என்று சொல்கிறார்கள். அதற்கு விரதத்தை முடிப்பது என்று அர்த்தம்.

அன்றாட வேலைச் சுமையினால் காலை உணவை உடனடியாக செய்து சாப்பிட பாக்கெட் உணவுகளைப் பலரும் சாப்பிடுகின்றனர். அந்த வகையில், மக்கள் பெரும்பாலும் காலை உணவாக சாப்பிடுவது கார்ன் ப்ளேக்ஸ்களைத்தான். கார்ன் ப்ளேக்ஸ்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

கார்ன் ப்ளேக்ஸ் தயாரிப்பதற்கு கார்ன், சர்க்கரை, கார்ன் சிரப் ஆகியவற்றைத்தான் முக்கியப் பொருட்களாகப் பயன்படுத்துகின்றன. இந்தப் பொருட்களில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் `கிளைசீமிக் இண்டெக்ஸ்’ (Glycemic Index) அளவு அதிகமாகவுள்ளது. ஜிஐ (GI) அளவு அதிகமுள்ள உணகளைச் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.

காலை உணவாக சாப்பிடும் கார்ன் ப்ளேக்ஸில் இருப்பது 350 கலோரிகள். அதிகமான கார்போஹைட்ரேட்டும் குறைவான புரதச் சத்தும் மட்டுமே கார்ன் ப்ளேக்ஸ்களில் இருக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது உடலின் ஆரோக்கியத்திற்குக் கேடாக அமையும்.

கார்ன் ஃப்ளேக்ஸ் உணவுடன் பால் மற்றும் இனிப்பு சுவைக்காக தேன் சேர்த்து சாப்பிடுவதால் உடலின் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தினமும் உணவாக கார்ன் ப்ளேக்ஸ் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

தற்போது பல ஆர்கானிக் கடைகளில் ராகி மற்றும் சிறுதானியங்களில் செய்யப்பட்ட சீரியல்கள் கிடைக்கின்றன.  கோதுமை மாவினால் செய்யப்பட்ட ஃபிளேக்ஸ்கள் கூட விற்பனைக்கு வந்துள்ளன.

தேவையான அளவு பால், துருவிய தேங்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். சிறுதானியங்கள்  நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அன்றாட வேலைகளைச் செய்வதற்குத் தேவையான சக்தியையும் கொடுக்கிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive