பொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது மாநிற மனிதனை தேடலாம்.

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றா...

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றார். இப்படி ஒரு நிலைமையில் தான் சில வருடங்களாக விக்ரம் பிரபுவும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படமே 60 வயது மாநிறம், இவர்கள் இருவருக்கும் அந்த வெற்றி கிடைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விக்ரம் பிரபு தன் அப்பா பிரகாஷ்ராஜை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகின்றார். பிரகாஷ்ராஜுக்கு தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு மறதி உள்ளது.

அதை தொடர்ந்து ஹோமில் இருக்கும் தன் அப்பாவை துணி எடுக்க அழைத்து செல்கின்றார் விக்ரம் பிரபு. அப்போது தன் கவனக்குறைவால் அப்பாவை ஹோம் வாசலிலே மிஸ் செய்கின்றார்.

பிறகு தன் அப்பாவை தேடி தெரு தெருவாக விக்ரம் பிரபு அலைய, ஒரு போலிஸை கொலை செய்துவிட்டு வரும் சமுத்திரகனியிடம் பிரகாஷ்ராஜ் சிக்குகின்றார். சமுத்திரக்கனிக்கு எவிடன்ஸ் ஏதும் இருக்க கூடாது அதனால் பிரகாஷ்ராஜை கொலை செய் என பாஸிடம் இருந்து ஆர்டர் வருகின்றது.

இதை தொடர்ந்து விக்ரம் பிரபு தன் அப்பாவை கண்டுபிடித்தாரா, சமுத்திரக்கனி பிரகாஷ்ராஜை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விக்ரபு பிரபு நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு போராடி வருகின்றார். இந்த படம் அவருக்கு ஹிட் கொடுக்குமா என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்.

பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றார், அனைத்தையும் மறந்து அவர் தன் மகன் பெயர் சிவா மட்டுமே நினைவில் வைத்து சிவா சாப்பிட்டாயா, சைக்கிள் ஓட்டினாயா என்று அவர் கேட்கும் இடம் கண் கலங்க வைக்கின்றது.

சமுத்திரக்கனி ஒரு கொலையை செய்துவிட்டு, அதை மறைக்க குமரவேல் குடும்பம், பிரகாஷ்ராஜ் ஏன் தன் கூடவே இருக்கும் பையனை கூட கொல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். ஆனால் அவர் எப்படி இதிலிருந்து வெளியே வந்து சாதாரண மனிதனாக மாறத்துடிக்கின்றார் என்பதையும் மிக அழகாக காட்டியுள்ளனர்.

படத்திற்கு மிகவும் பக்க பலமாக இருப்பது விஜியின் வசனமும், இளையராஜாவின் பின்னணி இசையும் தான். அன்பு தான் இந்த உலகம் அதை வெளியில் காட்டாமல் நாம் தான் உள்ளுக்குள்ளே அடக்கி வச்சுகிறோம் போன்ற வசனம் ரசிக்க வைக்கின்றது.

ஆனால், இத்தனை இருந்தும் மிக பொறுமையாக செல்லும் திரைக்கதை, படத்திற்கு இந்த ஸ்லோ தேவை என்றாலும் ஜென்ரல் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா ராதாமோகன்.

க்ளாப்ஸ்

நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு, அதிலும் பிரகாஷ்ராஜ் செம்ம ஸ்கோர் செய்கின்றார். விக்ரம் பிரபு- ‘மேயாத மான்’ இந்துஜாவின் காட்சிகள் பிரகாஷ்ராஜ் சொன்ன கதை போல் கிளைமேக்ஸ் வரும் விதம் ரசிக்க வைக்கின்றது.

படத்தின் வசனம் மற்றும் குமரவேல் மதுமிதா தம்பதிகளின் யதார்த்தமான காமெடி.

பிரகாஷ்ராஜ் தன் காதல் கதையை சொல்லும் இடம் கவிதை போல் உள்ளது.

இளையராஜா பின்னணி இசை.

பல்ப்ஸ்

மிக மெதுவாக நகரும் திரைக்கதை.

சமுத்திரக்கனி திருந்தி வாழவேண்டும் என்று நினைக்கும் போது அப்படி ஒரு முடிவு தேவையா...

மொத்தத்தில் கொஞ்சம் பொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது மாநிற மனிதனை தேடலாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive