இந்தியன் 2 படத்தை அடுத்து மாஸ் கூட்டணி அமைக்கும் ஷங்கர்: ஹீரோ யார் தெரியுமா?

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு மாஸ் கூட்டணி அமைக்கப் போகிறாராம் இயக்குனர் ஷங்கர். 2.0 படத்தை அடுத்து ஷங்கர் கமல் ஹாஸனை வைத்து இந்தியன் 2 ப...

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு மாஸ் கூட்டணி அமைக்கப் போகிறாராம் இயக்குனர் ஷங்கர்.

2.0 படத்தை அடுத்து ஷங்கர் கமல் ஹாஸனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க உள்ளது. செட் போடும் பணியால் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.

இந்நிலையில் அடுத்த படம் குறித்த வேலையிலும் இறங்கியுள்ளாராம் ஷங்கர்.

புதுப்படம்

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். அந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனை ஹீரோவாக நடிக்க வைக்க விரும்புகிறார் ஷங்கர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரித்திக்

சயின்ஸ் ஃபிக்ஷன் படம் தொடர்பாக ஷங்கர் தற்போது ரித்திக் ரோஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். ஷங்கர் சொன்ன கதை ரித்திக்கிற்கு மிகவும் பிடித்துள்ளதாம். இருப்பினும் ஒப்பந்தம் எதிலும் ரித்திக்கிடம் ஷங்கர் இன்னும் கையெழுத்து வாங்கவில்லையாம்.

வில்லன்

2.0 படத்தில் பக்ஷி ராஜனாக நடிக்குமாறு ஷங்கர் முதலில் ரித்திக் ரோஷனிடம் கேட்டாராம். அவரால் நடிக்க முடியாமல் போகவே அந்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்தாராம். தன்னால் நடிக்க முடியாமல் போனாலும் 2.0 படத்தை பாராட்டி ட்வீட் போட்டார் ரித்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன்

இந்தியன் 2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் துவங்க உள்ளது. அதன் பிறகு படக்குழு உக்ரைன் செல்கிறது. ஷங்கருக்கு 3.0 எடுக்கும் திட்டமும் உள்ளது. ஆனால் ரஜினி நடித்தால் மட்டுமே 3.0 படத்தை எடுப்பாராம்.

மேலும் பல...

0 comments

Blog Archive