தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி செய்த தவறுக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி ஆதரவாக பேசி இருக்கிறார். இதனால் தோனி தொடர்பாக நிலவி வந...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி செய்த தவறுக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி ஆதரவாக பேசி இருக்கிறார். இதனால் தோனி தொடர்பாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று முதல் மான்செஸ்டர் மைதானத்தில் மோதிக்கொண்டது. இந்த போட்டி பெரிய அளவில் வைரலானது.தொடக்கம் முதல் இறுதி வரை இந்த போட்டி விறுவிறுப்பாக சென்றது.

அதேபோல் மூன்று முறை இந்த போட்டியில் மழை குறுக்கிட்டது. நேற்று டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது.

எப்படி ஆடியது

இந்திய வீரர்கள் அனைவரும் இந்த போட்டியில் அதிரடியாக ஆடினார்கள். இதில் மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. இதில் மழை காரணமாக பாகிஸ்தான் இன்னிங்ஸ் மட்டும் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

என்ன சிக்கல்

எப்போதும் டிஆர்எஸில் கலக்கும் தோனி நேற்று முதல்நாள் நடந்த போட்டியில் முதல்முறை தவறு செய்தார். நேற்று முதல்நாள் நடந்த போட்டியில் குல்தீப் போட்ட ஓவர் ஒன்றில் தோனி ஒரு தவறு செய்தார். பாகிஸ்தானின் பாபர் அசம் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது சரியாக பாபர் குல்தீப் ஓவரில் எல்பிடபில்யூ முறையில் அவுட்டானார்.

ஆனால் இல்லை

இதற்கு நடுவர் விக்கெட் கொடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதை சரியாக கவனித்த கோலி டிஆர்எஸ் எடுக்கலாமா என்று தோனியிடம் ஆலோசனை கேட்டார். தோனி இதற்கு ஓகே சொல்வார் என்றுதான் களத்தில் இருந்த ரசிகர்கள் எல்லோரும் நினைத்தார்கள்.

கேட்கவில்லை

ஆனால் தோனி பந்து பேட்டில்தான் பட்டது என்று கூறினார். தோனியின் பேச்சை கேட்டு கோலி எல்பிடபிள்யூ கேட்கவில்லை. ஆனால் ரீப்ளேயில்தான் பந்து பேட்டில் படவில்லை, பேடில்தான் பட்டது என்பது தெரிந்தது. இது விக்கெட்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இதனால் தோனிக்கு எதிராக நேற்று சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

விளக்கம்

இந்த நிலையில் கோலி இதுகுறித்து பேசி இருக்கிறார். இன்று ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டவர் அணியினரிடம் இதுகுறித்து பேசியுள்ளார். தோனி எப்போதும் தவறு செய்ததே இல்லை. அவர் மிக சரியாக கணிப்பார். அன்று மட்டும் மிஸ்ஸாகிவிட்டது என்று தோனிக்கு ஆதரவாக சக வீரர்களிடம் அவர் பேசி இருக்கிறார். நேற்று டிஆர்எஸ் எடுக்கவில்லை என்ற போதும் கூட கோலி முகத்தில் எந்த விதமான வருத்தத்தையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive