தலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...!

மனித உடல் என்பது பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்ததாகும். மனித உடலில் மறைந்திருக்கும் ரகசியங்களை தெரிந்து கொள்ளும் ஆராய்ச்சிகள் உலகம்...

மனித உடல் என்பது பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்ததாகும். மனித உடலில் மறைந்திருக்கும் ரகசியங்களை தெரிந்து கொள்ளும் ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது உடலுக்குள் இருக்கும் குணப்படுத்தும் ஆற்றல் நம்மை பல நோய்களில் இருந்தும், ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

நமது உடலின் சில பகுதிகளை தூண்டுவது உடலில் இருக்கும் வலி மற்றும் விரும்பத்தகாத உணர்வுகளை குறைக்கும் வழியாகும். நமது உடல் பாகங்களின் சில பாகங்களும், நம் உடலின் இயல்பான செயல்பாடுகளும் நம்மை ஆச்சரியப்படுத்துவது மிகவும் இயல்பானது. உங்கள் உடலில் இருக்கும் சில பாகங்களை தூண்டினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிலாக்ஸ் ஆக்க உதவும்

நீங்கள் அதிக மனஅழுத்தத்தில் இருந்து விடுபட விரும்பினால் உங்கள் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவவும். குளிர்ந்த நீர் உங்களின் சுழற்சியை அதிகரிப்பதுடன் உங்களை ரிலாக்ஸாக உணர வைக்கும். இது பல நாடுகளில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு குணப்படுத்தும் முறையாகும்.

தொண்டை புண்ணை குணப்படுத்த

தொண்டை புண்ணை குணப்படுத்த டீ குடிப்பது நல்ல மருந்தாக கருதப்படுகிறது. ஆனால் அதனை விட எளிய வழி ஒன்று உள்ளது. உங்கள் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டால் உங்கள் காதை திருகவும். உங்கள் காதில் இருக்கும் நரம்புகளை தூண்டுவதன் மூலம் உங்கள் தொண்டை பிரச்சினைகளை குணப்படுத்தி நிவாரணத்தை வழங்கும்.

ஊசி பயத்தை நீக்கும்

ஊசி போடுவது குறித்து அனைவருக்குமே அடிமனதில் சிறிய பயம் இருக்கும். ஆனால் இந்த பயத்தை போக்க ஒரு எளிய வழி உள்ளது. ஊசி போடுவதற்கு முன் சிறிது இருமினால் ஊசி மீது இருக்கும் பயம் போய்விடும்.

மூக்கடைப்பை குணப்படுத்தும்

உங்கள் மூக்கு பாதைகளை ரிலாக்ஸாக வைக்க உங்கள் நாக்கை வாயின் மேற்புறம் நோக்கி அழுத்த வேண்டும். உங்கள் ஆள்காட்டி விரலை கொண்டு புருவத்தை நன்கு அழுத்தவும். இதனை செய்வதற்கு ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் மூச்சை இழுத்து பிடிக்கவும்.

தீக்காயங்களை குணப்படுத்தும்

தீக்காயங்கள் குணமாக அதிக காலம் ஏ எடுத்துக்கொள்ளும். உங்கள் விரலின் நுனிகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தொடவும். இந்த முறை தீக்காயங்களால் ஏற்பட்ட வடுக்களையும் குணப்டுத்தும்.
உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தும்

உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தும்

உங்கள் கட்டைவிரல் மீது ஊதினால், இது உங்கள் வயிற்றில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்வதுடன் இது உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும் உதவும். இது மிகவும் பயனுள்ள மருத்துவ முறையாகும்.

தலைவலியை குணப்படுத்தும்

உங்கள் கையில் வலியை குறைக்கும் மாத்திரைகள் இல்லையென்றால், நீங்கள் உங்கள் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். இந்த மசாஜ் உங்கள் தலைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் தலைவலியை குறைக்கும்.

பல் வலி

உங்களுக்கு பல் வலி அல்லது பல் கூச்சம் இருந்தால் உங்கள் கையின் பின்புறத்தில் ஐஸ்கட்டியை வைக்கவும். கையின் பின்புறத்தில் ஐஸ்கட்டியை தேய்த்து விட்டு அப்படியே ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் இருக்கும் பகுதியிலும் வைத்து தேய்க்கவும். வலிக்கான சிக்னல்களை மூளைக்கு அனுப்பும் நரம்புகள் இந்த இடத்தில் இருக்கிறது. இந்த குளிர்ந்த வெப்பநிலை சிக்னல்கள் அனுப்புவதை தடுக்கும்.

மேலும் பல...

0 comments

Blog Archive