சர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா?

ஆசியாவைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவாகும். இன்றைய நாட்களில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களில் நிறைய பேர் அரிசை விட மற்...

ஆசியாவைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவாகும். இன்றைய நாட்களில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களில் நிறைய பேர் அரிசை விட மற்ற முக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவதால் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்று நம்பி, அரிசியை புறக்கணிக்கின்றனர்.

அரிசியைப் பற்றியும் அதன் பல்வேறு வகைகளைப் பற்றியும் நிறைய விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஆரோக்கியத்தில் அரிசியின் பங்கு குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.

அரிசி

குறிப்பாக வெள்ளை அரிசியை புறக்கணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் சிலர், சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி, திணை அரிசி, கவுனி அரிசி என்று பல்வேறு அரிசி வகைகளை உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இந்த வகை அரிசி நமது முன்னோர்களால் அதிகம் உட்கொள்ளப்பட்டு பின்பு வெள்ளை அரிசியின் வருகையால் மறைக்கப்பட்டவை.

கருப்பு அரிசி

கருப்பு அரிசி என்னும் கவுனி அரிசி மிகவும் ஆரோக்கியமான அரிசியாக கருதப்படுகிறது. இது மிகவும் அரிய வகை அரிசியாகும். இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த அரிசியின் அறிமுகம் உள்ளது. வட கிழக்கு நாடுகளில் சக் ஹோ என்றும் தென்னிந்தியாவில் கவுனி அரிசி என்று அழைக்கப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள்

அரிசியின் நிறத்தை வைத்தே அதன் ஊட்டச்சத்தை கணிக்க முடியும். அரிசி எந்த அளவுக்கு அடர் நிறம் கொண்டுள்ளதோ, அந்த அளவிற்கு அதில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கும். இந்த அளவுகோல் வைத்து பார்க்கும்போது, கருப்பு அரிசி என்னும் கவுனி அரிசி, அரிசி வகைகளின் ஆரோக்கிய வரிசையில் முதல் இடத்தைப் பிடிக்கிறது. இத்தகைய பெருமை பொருந்திய கருப்பு அரிசியின் அற்புத நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அன்டி ஆக்சிடென்ட்

கருப்பு கவுனி அரிசியில் அளவுக்கு அதிகமான அன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்து உள்ளன. கருப்பு அரிசியில் காணப்படும் அந்தோசயனின் உள்ளடக்கம், மற்ற தானியங்களை விட அதிகம் இருப்பதால், சிவப்பு அரிசி, திணை அரிசி போன்றவற்றை விட இது ஒரு சிறந்த உணவாக போற்றப்படுகிறது.

இந்த அந்தோசயனின் என்னும் அன்டி ஆக்சிடென்ட் இந்த தானியத்தில் இருப்பதால், இதனை உட்கொள்பவர்களுக்கு இதய நோய், புற்று நோய் மற்றும் இன்னும் பல நோய்கள் தடுக்கப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

நார்ச்சத்து

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து மற்றும் கனிமங்கள் அதிகம் உள்ளன. ஒரு கிண்ணம் அல்லது 100 கிராம் கவுனி அரிசியில் 4.9 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. பழுப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட இது இரண்டு மடங்கு உயர்ந்ததாகும்.

ஆகவே, உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து கிடைக்கக் வேண்டும் என்று விரும்புகிறவர்கள், மற்ற வகை அரிசியை உட்கொள்வதை விட கருப்பு கவுனி அரிசியை எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

அழற்சி எதிர்ப்பு தன்மை

கருப்பு அரிசி இயற்கையாகவே குணப்படுத்தும் தன்மை கொண்ட உணவுப் பொருள். கருப்பு கவுனி அரிசி, உடலில் அழற்சி உண்டாக்கும் கூறுகளைக் குறைத்து, அழற்சி எதிர்ப்பு கூறுகளை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனால், புற்று நோய், ஒவ்வாமை மற்றும் கீல்வாதம் போன்ற அழற்சி தொடர்புடைய நோய்கள் தடுக்கப்படுகின்றன.
நச்சுகள்
நச்சுகள்

கருப்பு கவுனி அரிசி இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்ட ஒரு உணவுப் பொருள். கருப்பு அரிசியில் காணப்படும் பல்லூட்டச்சத்துகள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளைப் போக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அடுத்த முறை நீங்கள் அரிசி வாங்கும்போது, கட்டாயம் இந்த சிறப்பு தன்மை வாய்ந்த கருப்பு அரிசியை வாங்க நீங்கள் முயற்சிக்கலாம்.

க்ளுடன் அல்லாத தானியம்

கருப்பு அரிசி, மற்ற அரிசி வகைகளைப் போல், இயற்கையாகவே க்ளுடன் இல்லாமல் இருக்கும் அரிசியாகும். க்ளுடன் ஒவ்வாமை இருந்து உங்களுக்கு செலியாக் நோய் பாதிப்பு இருந்தால், உங்கள் தினசரி உணவு அட்டவணையில் கருப்பு அரிசியை இணைத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள்

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கருப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வதால் உங்கள் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது, உங்கள் உடல் எடை கண்காணிக்கப்படுகிறது.

இதனால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால், வெள்ளை அரிசியை உண்பதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால், உங்கள் உடல் நீரிழிவை எதிர்த்து போராட உதவுகிறது.

எடையைக் குறைக்க

கருப்பு கவுனி அரிசி, ஓர் முழு தானியம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம். இந்த ஒருங்கிணைந்த பண்பு, உடலில் பசிக்கான அறிகுறியை குறைத்து, அதிகம் சாப்பிடுவதைக் குறைக்க உதவுகிறது. பொதுவாக இன்சுலின் எதிர்ப்பு உடல் எடை அதிகரிப்புடன் தொடர்புடையது.

ஆனால் கருப்பு அரிசி இன்சுலின் எதிர்ப்பை தடுக்க உதவுகிறது. இதனால் மறைமுகமாக எடை குறைப்பில் உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உங்கள் எடை அதிகரித்து உடல் பருமனால் கவலைப்படுபவர்கள் நிச்சயம் கருப்பு அரிசியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் விரைவாக உங்கள் எடை குறையும்.

இதய ஆரோக்கியம்

மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தின் முக்கிய காரணமான தமனியில் கொழுப்பு படிதலை குறைக்க கவுனி அரிசி உதவுகிறது. இது ஒரு சிறந்த குணப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு உணவுப் பொருள். மேலும் இதய நோய்க்கான மற்ற இரண்டு முக்கிய காரணிகளை குறைக்கவும் கருப்பு கவுனி அரிசி உதவுகிறது, அது, LDL ,ட்ரை க்ளிசரைடு அளவு மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் ஆகியவையாகும்.


மேலும் பல...

0 comments

Blog Archive