சவுமியாவும், 8 திருநங்கைகளும்.. மிரட்டி வந்த மகாலட்சுமி.. தலை சுற்ற வைக்கும் மாங்காடு சம்பவம்!

பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட பிரச்சனை, தகராறு, போதை, கொலை, சரண் என ஒவ்வொன்றாக நடந்து முடிந்துள்ளது இந்த திருநங்கைகளின் வாழ்க்கையில்! சென்...

பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட பிரச்சனை, தகராறு, போதை, கொலை, சரண் என ஒவ்வொன்றாக நடந்து முடிந்துள்ளது இந்த திருநங்கைகளின் வாழ்க்கையில்!

சென்னை மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் சவுமியா என்ற திருநங்கை தனது தோழிகளான 8 திருநங்கையுடன் ஒரு வீடு வாடக்கு எடுத்து தனியாக தங்கியிருந்தார். சவுமிவுக்கு வயசு 25

வசந்த் (எ) வசந்தி,செல்வமணி (எ) ஸ்ரேயா, வெங்கடேசன் (எ) ஆர்த்தி. மனோஜ் (எ) மனீசா சபிக்ஷா (எ) திவ்யா, ரோசி (எ) வினோதினி, சங்கர் (எ) சுதா, அசோக் (எ) ரெஜினா, ஆகியோர்தான் அந்த தோழிகள். இவர்கள் அனைவருமே 26 வயசை தாண்டாதவர்கள்!

 கல்குவாரி

இவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கடைகளில் வசூல் செய்து, அதனை பங்கிட்டு வாழ்க்கை ஓட்டி வந்தனர். கடந்த 6-ம்தேதி வசூல் செய்த பணத்துடன், மது வாங்கி கொண்டு, சிக்கராயபுரம் கல்குவாரி குட்டை அருகே வந்தனர்.

வசூல் பணம்

எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தண்ணி அடித்தனர். போதையும் தலைக்கு ஏறியது. அப்போது சவுமியாவிற்கும் மற்ற திருநங்கைளுக்கும் வசூல் செய்த பணத்தை பிரிப்பதில் பிரச்சனை எழுந்தது. இதனால் ஆத்திரப்பட்ட மற்ற திருநங்கைகள் சவுமியாவை சரமாரியாக தாக்கியதில், அங்கேயே உயிரிழந்துவிட்டார் சவுமியா.

மகாலட்சுமி

இதைபார்த்து என்ன செய்வதென்றே தெரியாத திருநங்கைகள் தங்கள் சங்க தலைவி கணபதி என்ற மகாலட்சுயிடம் வந்து சொன்னார்கள். உடனே அவர், கொல்லப்பட்ட கல்குட்டையிலேயே சவுமியா பிணத்தை வீசிவிடுங்கள் என்றார். அதன்படியே செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல சகஜமாக இருந்தனர். கல்குட்டையில் சவுமியா உடலை கண்ட போலீசார், யார், என்ன விவரம் என கண்டுபிடித்து, தோழிகளிடமே கொண்டு வந்து கொடுத்துவிட்டு போயினர்.

சித்ரவதை

இந்த சம்பவத்துக்கு பிறகு, மகாலட்சுமியிடம் நடவடிக்கை மாறியது. 8 திருநங்கைகளிடமும், தினமும் 3000 ரூபாய் வேண்டும் என்று மிரட்ட தொடங்கினார். அதன்படியே அவர்களும் தந்தனர். ஒருசில சமயங்களில் தர முடியாமல் போனால் மகாலட்சுமி ஆட்களை வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

சரமாரி அடி

இதனால் வலி பொறுக்க முடியாத அவர்கள், தப்பித்து சென்றாலும் ஆள்வைத்து கடத்தி அடித்துள்ளார். இதனால் அவர்களிடமிருந்தும் தப்பிய 8 பேரும் மாங்காடு போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர். இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். சங்க தலைவி மகாலட்சுமியை தேடி வருகிறார்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive