அனுபவம்
நிகழ்வுகள்
கைதாகிறார் பா ரஞ்சித்?
June 21, 2019
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் நடந்த நீலப் புலிகள் நிறுவனர் உமர் பாரூக் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னர் ராஜராஜசோழனின் ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கின, அந்த ஆட்சியில்தான் தலித் மக்களின் நிலங்களைப் பறித்து பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை பா.ரஞ்சித் முன்வைத்திருந்தார்.
இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் கருத்து குறித்து திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். 153, 153 – ஏ ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலகத்தை தூண்டும் வகையில் பேசுவது, சாதி, மதம், மொழி ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசியது என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பா.ரஞ்சித் மனுத் தாக்கல் செய்து இருந்தார். பா.ரஞ்சித்தின் ஜாமீன் மனு, நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி, முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சில திருத்தங்கள் இருப்பதால் அதனை சரிசெய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை ஜுன் 21 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதுவரை பா.ரஞ்சித் மீது எவ்வித கைது நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதித்த தடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.
தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து உள்ளதால் பா.ரஞ்சித் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

0 comments