ஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...

பல நேரங்களில் நாம சாப்பிட்ட உணவு கூட நமக்கு நஞ்சாக மாறிவிடும். காரணம் அதிலுள்ள சில பொருட்கள் நம் சீரண மண்டலத்தை பாதித்து விடுகிறது. ஃபுட் ப...

பல நேரங்களில் நாம சாப்பிட்ட உணவு கூட நமக்கு நஞ்சாக மாறிவிடும். காரணம் அதிலுள்ள சில பொருட்கள் நம் சீரண மண்டலத்தை பாதித்து விடுகிறது. ஃபுட் பாய்ஸ்சனிங் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.

இந்த உணவு நஞ்சுக்கு முக்கிய காரணமாக இருப்பது சல்மோனல்லா அல்லது ஈ கோலி பாக்டீரியா தான். அதே மாதிரி சில வைரஸ்கள், பாராசைட்ஸ் கூட அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இந்த அறிகுறிகள் உணவு உண்ட சில மணி நேரத்திலயோ அல்லது சில வாரங்களிலோ ஏற்பட்டு விடலாம்.

குமட்டல்

குமட்டல் தான் உணவு நஞ்சாதலின் முதல் அறிகுறியாகும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தொடர்ந்து நேரிட்டு கொண்டே இருக்கும். எனவே உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் அல்லது தேநீர் எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு ஓரளவுக்கு செட் ஆன பிறகு பிரட் அல்லது லேசான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வயிற்று போக்கு

உணவு நஞ்சாதலின் மற்றொரு அறிகுறி வயிற்று போக்கு. குமட்டல் உங்கள் வயிற்றுக்கு ஒவ்வாத உணவு உள்ளதை காட்டுகிறது. எனவே குமட்டலுக்கு பிறகு வயிற்று போக்கு ஏற்படலாம்.

வயிற்று வலி

வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் சுருங்கி விரிவதால் இந்த வயிற்று வலி உண்டாகிறது. உணவு நஞ்சான உடன் சில மணி நேரத்தில் வயிற்று வலி ஆரம்பித்து விடும். அதே நேரம் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கும் பொதுவானது தான்.

பசியின்மை

ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டால் உங்கள் பசிக்காது. ஏனெனில் ஏற்கனவே வயிற்றில் இருக்கும் உணவை வெளியேற்ற உடம்பு தடுமாறிக் கொண்டு இருக்கும். ஓரளவு உடம்பு செட்டான பிறகு உடலுக்கு வலிமை சேர்க்க லேசான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சூப், பிரட் போன்றவற்றை சாப்பிடலாம்.

பலவீனம்

உடம்பில் நீர்ச்சத்து குறைவதால் உடம்பு பலவீனமடைய ஆரம்பித்து விடும். இந்த ஃபுட் பாய்சனிங் உங்கள் தினசரி வேலையைக் கூட செய்ய முடியாமல் ஆக்கி விடும். தொடர்ச்சியான வாந்தி வயிற்று போக்கு ஏற்பட்டு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைய ஆரம்பித்து விடும். இதனால் கிறங்கிப் போகும் நிலை ஏற்படலாம்.

சோர்வு

ஃபுட் பாய்சனிங் அடைந்த நபர்கள் கூடவே சோர்வையும் பெறுகின்றனர். வாந்தி, வயிற்றுப் போக்கு இவற்றால் உடம்பில் நீர்ச்சத்து குறைவதால் சோர்வு ஏற்படுகிறது. எனவே உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீர் எடுத்து உடம்பிற்கு நீர்ச்சத்தை கொடுக்க வேண்டும்.

காய்ச்சல்

ஃபுட் பாய்சனிங் ஏற்பட்ட உடன் நம் உடல் அதை எதிர்த்து போராட தொடங்கி விடும். இதனால் காய்ச்சல் உண்டாகும். வாந்தி, வயிற்றுப் போக்கு இவற்றுடன் காய்ச்சலால் ஏற்படும் சூடான வெப்பநிலையும் தொற்றுக்கு காரணமான காய்ச்சலை போக்க பயன்படுகிறது.

வியர்த்தல் மற்றும் குளிர்தல்

உணவு நஞ்சாதலால் காய்ச்சல் ஏற்பட்டு வியர்த்தல், குளிர்தல் கூட ஏற்படும். இதெல்லாம் உடம்பு தன்னைத்தானே குணப்படுத்துகிற அறிகுறியாகும்.

உணவை விழுங்குவதில் பிரச்சனை

போட்டுலிசம் என்ற பாக்டீரியா நாம் சாப்பிடும் மீன்களில் உள்ளது. இந்த பாக்டீரியா தொண்டை யில் வலியை ஏற்படுத்தி உணவை விழுங்குவதில் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது. உணவுக்குழாயில் உள்ள தசைகள் விறைப்பாகி, பிடிப்பு ஏற்படலாம், இது சில நேரங்களில் சுவாசத்தை கூட கடினமாக்கும்.

தீவிர அறிகுறிகள்

தீவிர அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. மலத்தில் இரத்தம் வருதல், வாந்தியில் இரத்தம் வருதல், காய்ச்சல் 102 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலே இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளுங்கள். அதே மாதிரி 3 நாட்களுக்கு மேல் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர்ச்சத்து குறைவு ஏற்பட ஆரம்பித்து விடும். உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive