தூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...!

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும்பிரச்சினையாகும். உடல் எடையை குறைக்க பல வழிகளில் அனைவரும் முயன்று வருக...

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும்பிரச்சினையாகும். உடல் எடையை குறைக்க பல வழிகளில் அனைவரும் முயன்று வருகின்றனர். பொதுவாக காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது மட்டும்தான் உடல் எடையை குறைக்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.


உண்மையில் உடற்பயிற்சி எப்பொழுது செய்தல் நன்மை வழங்கக்கூடியதுதான். காலை நேரத்தில் எழுந்து உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தால் இரவு நேரத்தில் எடை குறைக்க முயற்சி செய்யலாம். இந்த பதிவில் எடையை குறைக்க இரவு நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இரவு உடற்பயிற்சி

இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது எடை குறைப்பிற்கு உதவும். உங்கள் உடலுக்கு இரவு நேரத்தில் அதிக செயல்பாடுகள் இருக்காது எனவே அதிக ஆற்றல் தேவைப்படாது. மாலையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில ஊட்டச்சத்துக்கள் செயலற்று இருப்பதால் உங்கள் உடலில் கொழுப்பாக தேங்கிவிடும். இதனை சில வழிகள் மூலம் குறைக்கலாம்.

டிரிப்டோபன் உணவுகள்

அமினோ அமிலமான டிரிப்டோபன் அதிகமிருக்கும் உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு நல்ல தூக்கத்தை வழங்கும். மேலும் உங்களுக்கு தூக்கத்தில் எந்தவித தொந்தரவும் ஏற்படாது. இது மனஅழுத்த ஹார்மோன்கள் மற்றும் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் க்ரெலின் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.

சிற்றுண்டிகள்

இரவு நேரத்தில் சாப்பிடும் சிற்றுண்டிகள் எப்பொழுதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் இவை அதிகளவு கலோரிகளை வழங்குவதன் மூலம் ஊட்டச்சத்துக்களும் குறைவாக இருக்கும். கொழுப்பு அதிகமிருக்கும் சிற்றுண்டிகள் தூக்கத்தை கெடுப்பதோடு ஜீரண கோளாறுகளையும் ஏற்படுத்தும். இரவு நேரங்களில் டிவி பார்த்து கொண்டே சாப்பிடுவது அல்லது விளையாடிக்கொண்டே சாப்பிடுவது அதிக கலோரிகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

உடற்பயிற்சிகள்

ஜிம்மில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி எடையை தூக்குவதன் மூலம் கொழுப்பை கறைக்கலாம். எடை தூக்குவது கொழுப்பை குறைக்கலாம் மேலும் இது உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை 48 மணி நேரத்திற்கு உயர்த்தும். நீங்கள் இரவு நேரத்தில் உடற்பயிற்சிகள் செய்தால் தூங்குவதற்கு முன் புரோட்டினை எடுத்து கொள்ளவேண்டும்.

ரூய்போஸ் டீ

இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் ரூய்போஸ் டீ குடியுங்கள். இது உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்புகளை குறைக்கிறது அதற்கு காரணம் அதிலிருக்கும் சக்திவாய்ந்த அஸ்பாலத்தின் பிளேவனாய்டு ஆகும். இது மனஅழுத்த ஹார்மோன்களை குறைப்பதன் மூலம் பசியை கட்டுப்படுத்துவதுடன் கொழுப்பு வயிறில் சேருவதை தடுக்கிறது.

தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்

தண்ணீர் குடிப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கிறது, ஆனால் தூங்க செல்லும் முன் தண்ணீர் குடிப்பது உங்களுக்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். தூங்குவதற்கு முன் அதிக தண்ணீர் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுவதுடன் தூக்கத்தையும் கெடுக்கும். எடை குறைப்பிற்கு தூக்கம் மிகவும் அவசியமானதாகும். அதில் பாதிப்பு ஏற்படும்போது நிச்சயம் எடை இழப்பில் பாதிப்பு ஏற்படும்.

புரோட்டின் ஷேக்

தூங்க செல்வதற்கு முன் புரோட்டின் ஷேக் குடிப்பது உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு ஒல்லியான தோற்றத்தையும் வழங்கும். இது இரவு நேரத்தில் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive