பிக் பாஸ் 3: இந்த தடவை கமலோட சேர்த்து ரஜினியும்.. 100 நாள் அந்த வீட்ல தான் இருக்கப் போறாங்க!

பிக் பாஸ் வீட்டில் இம்முறை ரஜினியும், கமலும் 100 நாட்கள் இருக்கப் போகிறார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா..? மேற்கொண்டு படியுங்கள் புரியும்...

பிக் பாஸ் வீட்டில் இம்முறை ரஜினியும், கமலும் 100 நாட்கள் இருக்கப் போகிறார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா..? மேற்கொண்டு படியுங்கள் புரியும்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்க இருப்பதால், அதன் ரசிகர்கள் கொண்டாட்டமாக இருக்கின்றனர். கடந்த சீசன்களில் இருந்து நிச்சயம் இந்த சீசன் வேறுபட்டு, சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இப்போதே பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்ற தகவல்கள் கசியத் தொடங்கி விட்டன. இன்னும் சில தினங்களில் போட்டியாளர்களும் யார் எனத் தெரிந்து விடும்.

வழக்கமாக பிக் பாஸ் வீட்டிற்குள் 15 பிரபலங்கள் போட்டியாளர்களாக இருப்பார்கள். வாரத்தின் இறுதி நாட்களில் அகம் டிவி மூலம் கமல் அவர்களுடன் உரையாடுவார். நிகழ்ச்சியின் இறுதி நாட்களில் கமல் எப்போதும் கவுண்ட்டிங் சொல்வது போன்ற வீடியோ பிக் பாஸ் வீட்டில் ஓடிக் கொண்டே இருக்கும்.

பிக் பாஸ் 3:இனி 'அங்க' உட்காந்து யாரும் ஒப்பாரி வைக்க முடியாது.. மருத்துவ முத்தத்துக்கும் நோ சான்ஸ்

இந்நிலையில், அவற்றில் இருந்து வேறுபட்டு இம்முறை போட்டியாளர்களுடன் 100 நாளும், கமல் இருப்பது போன்று ஒரு சூழலை பிக் பாஸ் நிகழ்ச்சி தரப்பு செய்துள்ளது. கமல் மட்டுமல்ல, ரஜினியையும் இதில் அவர்கள் சேர்த்துள்ளனர்.

அதாவது, வீட்டிற்குள் ஒருபுறம் பேட்ட படத்தில் ரஜினியின் கெட்டப் ஓவியம் ஒன்று உள்ளது. அதற்கு எதிரே ஆன்மீகவாதி ஸ்டைலில், விருமாண்டி கமல்ஹாசன் அமர்ந்திருக்கும் ஓவியம் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம் எப்போதும் கமலையும், ரஜினியையும் பார்த்து பயத்தோடு போட்டியாளர்கள் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive