இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

புதிய கார் வாங்கும்போது இந்தியர்கள் அதிகம் கவனிக்கும் விஷயம் மைலேஜ். மைலேஜை வாரி வழங்கும் கார்களுக்குதான் இந்தியர்கள் முக்கியத்துவம் கொடுப்...

புதிய கார் வாங்கும்போது இந்தியர்கள் அதிகம் கவனிக்கும் விஷயம் மைலேஜ். மைலேஜை வாரி வழங்கும் கார்களுக்குதான் இந்தியர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்ற விஷயம் உலகிற்கே தெரிந்ததுதான். எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்றவாறு எரிபொருள் சிக்கனத்தில் தலைசிறந்து விளங்கும் கார்களை இங்கு விற்பனை செய்து வருகின்றன.

ஆனால் எரிபொருள் சிக்கனம் தொடர்பாக இந்தியர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினால், பெரும்பாலானோருக்கு இல்லை என்பதுதான் உண்மை. எரிபொருள் சிக்கனம் தொடர்பான பல விஷயங்களை நம்மில் பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். அவற்றை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால், உங்கள் காரில் இருந்து சிறப்பான மைலேஜை பெறலாம்.
இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

இன்ஜினை ஐட்லிங்கில் விட்டால் மைலேஜ் பாதிக்குமா?

இன்ஜினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் (Idling) விட்டாலும் மைலேஜ் பாதிக்காது என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். அது உண்மை எனவும் நம்புகின்றனர். ஆனால் இது தவறு. இன்ஜின் ஐட்லிங்கில் இருந்தாலும் கூட எரிபொருளை எரித்து கொண்டேதான் இருக்கும். எனினும் கார் வேகமாக ஓடி கொண்டிருப்பதை காட்டிலும் இந்த சமயத்தில் எரிபொருள் நுகர்வு சற்று குறைவாக இருக்கும்.
இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

எனவே ஐட்லிங்கில் விடுவதை விட இன்ஜினை ஆஃப் செய்வதே சிறந்தது. இதன்மூலம் அதிக எரிபொருளை மிச்சம் பிடிக்கலாம். இருந்தபோதும் ஓரிடத்தில் நீங்கள் 15 வினாடிகளுக்கு உள்ளாக மட்டுமே காத்திருக்க வேண்டியதாகிறது என்றால், இன்ஜினை ஆஃப் செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஒரு இடத்தில் நீங்கள் 15-20 வினாடிகளுக்கும் மேலாக நிற்க வேண்டியுள்ளது என்றால், இன்ஜினை ஆஃப் செய்து விடுங்கள்.

க்ரூஸ் கண்ட்ரோலுக்கும், மைலேஜிற்கும் தொடர்பு உள்ளதா?

க்ரூஸ் கண்ட்ரோல் என்பது கார்களில் வழங்கப்படும் ஒரு வசதி மட்டும்தான். அதற்கும் மைலேஜிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. உண்மையில் க்ரூஸ் கண்ட்ரோல் காரின் மைலேஜை அதிகரிக்கிறது. கார் ஒரே சீரான வேகத்தில் பயணம் செய்ய க்ரூஸ் கண்ட்ரோல் வசதி உதவி செய்கிறது.
இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தினால் லாங் டிரிப்களை எளிதாக மேற்கொள்ள முடியும். க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை நீங்கள் பயன்படுத்தும்போது, தேவையில்லாத ஆக்ஸலரேஷன் மூலம் இன்ஜின் எரிபொருளை வீணாக்குவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். இதன் விளைவாக உங்கள் காரின் மைலேஜ் அதிகரிக்கும்.
இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

எடைக்கும், எரிபொருள் சிக்கனத்திற்கும் தொடர்பு உள்ளதா?

க்ரூஸ் கண்ட்ரோலுக்கும், மைலேஜிற்கும் தொடர்பு இல்லை என்பதை போல், எடைக்கும், மைலேஜிற்கும் தொடர்பு இல்லை எனவும் கூட சிலர் நம்புகின்றனர். ஆனால் இதுவும் தவறுதான். எடைக்கும், மைலேஜிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. காரில் எடை குறைவாக இருந்தால், இன்ஜினிற்கான வேலையும் குறைவாகதான் இருக்கும்.

அதாவது எடை குறைவாக இருக்கும் சமயத்தில், கார் 'மூவ்' ஆக இன்ஜின் குறைவான எரிபொருளை மட்டுமே நுகரும். இதன் மூலம் உங்கள் கார் நல்ல மைலேஜை வழங்கும். எனவே காரில் தேவையில்லாமல் எடையை திணிக்காதீர்கள். உங்கள் காரின் பூட்டில் அதிக எடையுடைய பொருட்கள் தேவையில்லாமல் இருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள்.
இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

எந்த பெட்ரோல் பங்க்கில் வேண்டுமானாலும் எரிபொருள் நிரப்பலாமா?

''அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான எரிபொருள்தான் விற்பனை செய்யப்படுகிறது. எனவே எங்கே நிரப்புகிறோம் என்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல'' என பலர் நினைக்கின்றனர். இந்தியாவில் பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு தவறான எண்ணம் இது. பெட்ரோல் பங்க்கின் நிறுவனம் ஒன்றாக இருந்தாலும் கூட, அவை வெவ்வேறு நபர்களால், வெவ்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன.

இதில், ஒரு சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எரிபொருளில் கலப்படம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இன்னும் ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் டிஸ்ப்ளேவில் நீங்கள் பார்க்கும் அளவை விட உங்களுக்கு குறைவான எரிபொருள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டிருக்கும். இதுபோன்று பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேற்றப்படுகின்றன.
இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

எனவே உங்கள் காரின் மைலேஜ் குறைந்தால், அது நீங்கள் உங்கள் பெட்ரோல் பங்க்கை மாற்றியாக வேண்டிய நேரம் என்பதன் அறிகுறியாக கூட இருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க உங்களுக்கு சௌகரியமான அதே சமயம் தரமான மற்றும் சரியான அளவில் எரிபொருளை வினியோகம் செய்யும் பெட்ரோல் பங்க்கை கண்டறியுங்கள். அங்கு எரிபொருள் நிரப்புவதை கடைபிடிக்கலாம்.

பிரேக்கிங்கிற்கும், மைலேஜிற்கும் தொடர்பு உள்ளதா?

பிரேக்கிங்கிற்கும், மைலேஜிற்கும் தொடர்பு இல்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால் இதுவும் தவறு. காரின் வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது காரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே பிரேக் பிடிக்கப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு தேவையில்லாமல் தொடர்ந்து பிரேக்குகளை பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.
இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

தேவையில்லாமல் பிரேக்குகளை பயன்படுத்தினால், பிரேக் பேடுகள் (Brake Pads) சேதம் அடையும் என்பதுடன், மைலேஜ் குறைந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கும்போதும் காரின் வேகம் குறைகிறது. இதன்பின் மீண்டும் நீங்கள் ஆக்ஸலரேட்டரை மிதிக்கும்போது, மறுபடியும் வேகம் எடுக்க இன்ஜின் கடினமாக வேலை செய்ய வேண்டியதாகிறது.

இதன் காரணமாக மைலேஜ் குறையலாம். எனவே தேவைப்படும் நேரங்களில் மட்டும் பிரேக்குகளை பயன்படுத்துங்கள். முன்னதாக ஒரு சிலர் வாகனத்தின் மைலேஜ் தொடர்பாக தாங்கள் கேள்விப்பட்ட கட்டுக்கதைகளை மற்றவர்களுக்கும் உபதேசம் செய்கின்றனர். அவர்களும் அதனை ஆராயாமல் அப்படியே நம்புகின்றனர். இதுபோன்ற தகவல்களை எல்லாம் ஆராய்ந்து செயல்பட்டால், உங்கள் வாகனம் சிறப்பான வழங்குவது உறுதி.

மேலும் பல...

0 comments

Blog Archive