காவி ஜெர்சி இருக்கட்டும்.. இந்தியா இன்று விளையாடும் போட்டிக்கு பின் இப்படி ஒரு விஷயம் இருக்கா!!

இந்திய அணி புதிய காவி ஜெர்சியோடு இன்று விளையாடும் போட்டிக்கு பின் முக்கியமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. வெறும் ஹோம் அவே ஜெர்சியாக மட்டும் இ...

இந்திய அணி புதிய காவி ஜெர்சியோடு இன்று விளையாடும் போட்டிக்கு பின் முக்கியமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. வெறும் ஹோம் அவே ஜெர்சியாக மட்டும் இந்தியா இதை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியே மிகவும் வித்தியாசமாக இருக்க போகிறது என்பது குறிப்பிட போகிறது.

இன்று உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இரண்டு அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து இருக்கிறது.

இன்று வென்றால்தான் இங்கிலாந்து அணியால் உலகக் கோப்பை செமி பைனலுக்கு செல்ல முடியும். அதே சமயம் இன்று நடக்கும் போட்டியில் வேறு ஒரு முக்கியமான விஷயமும் உள்ளது.

என்ன போட்டி

இன்று நடக்கும் போட்டியை இந்தியா இங்கிலாந்து அணிகள் குழந்தைகளின் நலனுக்காக விளையாடுகிறது. ஐசிசி மற்றும் யுனிசெப் இணைந்து இந்த போட்டியை குழந்தைகளின் நலனுக்காக அர்பணிக்கிறது. இதனால் இன்று நடக்கும் போட்டிக்கு #OneDay4Children என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பல சுவாரசியமான சம்பவம் நடக்க உள்ளது.

என்ன பணிகள்

இன்று நடக்கும் போட்டிக்கும் முன்பும், பின்பும் இருக்கும் பல பணிகளை பெரியவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் செய்ய இருக்கிறார்கள். அதாவது இன்று குழந்தைகள் மைதானத்தில் வேலை செய்வார்கள். கமெண்ட்ரி செய்வார்கள். அதேபோல் வீரர்களை பேட்டி எடுப்பார்கள். கேமரா மேனுக்கு உதவுவார்கள். இப்படி ஒரு கிரிக்கெட் போட்டிக்கு பின் நடக்கும் பணிகளை எல்லாம் இவர்கள் இன்று செய்ய போகிறார்கள்.

ஆர்வம்

கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் எல்லாம் இதை இன்று செய்ய போகிறார்கள். இதற்கான வீடியோ ஒன்றை இப்போதே ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. இதனால்தான் இதற்கு #OneDay4Children என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து, அவர்களை மையப்படுத்தி இன்று போட்டி நடக்கிறது.

உடை

இந்த போட்டியில்தான் இந்திய அணி வீரர்கள் புதிய காவி உடையுடன் ஆட இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. அதேபோல் இன்று நடக்கும் போட்டியில் வரும் வருமானத்தை பிசிசிஐ யுனிசெப் அமைப்பிற்கு அளிக்க உள்ளது. இங்கிலாந்து அணியும் தங்கள் வருமானத்தை யுனிசெப் அமைப்பிற்கு அளிக்க உள்ளது. இந்த பணம் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive