Reliance Fraud நிறைய மோசடி பண்ணிருக்காய்ங்க சார்! அரசிடம் போட்டு கொடுத்து விட்டு ஆடிட்டர் ராஜினாமா!

Price Waterhouse and Co (PwC) உலகின் முன்னணி ஆடிட் நிறுவனங்களில் ஒன்று. உலகின் பல வளர்ந்த மற்றும் வளரும் நாட்டு ஆடிட்டர்களை (பட்டையக் கணக்க...

Price Waterhouse and Co (PwC) உலகின் முன்னணி ஆடிட் நிறுவனங்களில் ஒன்று. உலகின் பல வளர்ந்த மற்றும் வளரும் நாட்டு ஆடிட்டர்களை (பட்டையக் கணக்காளர் - Chartered Accountant) ஒன்று சேர்ந்து ஒரு நிறுவனமாக உலகம் முழுக்க இயங்கி வருகிறார்கள்.

உலகின் டாப் 5 ஆடிட் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இவர்கள் மனது வைத்து, கை வைத்த கம்பெனி கணக்குகள் எல்லாம், கவனிக்கப்படாமல் இருந்ததில்லை. எடுக்கும் கணக்குகளில் முதலாளிகளுக்குத் தேவையானதை சட்டப் படி செய்யாமல் விட்டதே இல்லை. அந்த அளவுக்கு நம்பகமான வளர்ந்த நிறுவனம்.

இந்த Price Waterhouse and Co (PwC) தான் இந்தியாவின் டாடா, பிர்லா, அம்பானியின் Reliance, ஸ்டெர்லைட் என பல முன்னணி கார்ப்பரெட் நிறுவனங்களுக்கு கணக்கு வழக்குகளை நேர் செய்து கொடுக்கும் பெரிய தல கட்டு ஆடிட்டர்கள். இப்போது இவர்களே Reliance நிறுவனத்தில் ஏமாற்று வேலைகள், தப்பு தண்டாக்கல் அதிகம் நடப்பதாகச் சொல்லி வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிறுவனம் ராஜினாமா செய்தது அவ்வளவு பெரிய விஷயமா..? ஆம். அதற்கு இந்த ஆடிட் நிறுவனம் எவ்வளவு பெரியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

திறமைகள்

ரஷ்யாவில் அரசியல் ரீதியாக பலி கெடா ஆக்கப்பட்ட Yukos என்கிற எண்ணெய் நிறுவனத்தை வீழ்த்த நினைத்தது ரஷ்ய அரசு. ஆனால் அதன் கணக்கு வழக்குகள் தெள்ளத் தெளிவாக இருந்தன. ரஷ்ய அரசாங்கத்தாலேயே ஒன்றும் செய்ய முடியாமல் திணறியது. Yukos நிறுவனத்தை வீழ்த்த முடியவில்லை. காரணம் சுத்தமான கணக்கு வழக்குகள். போதாக் குறைக்கு Yukos நிறுவனம் சார்பாக அரசோடு கணக்கு வழக்குகளை வாதிடுவதும் இந்த Price Waterhouse and Co என்பதால் ரஷ்ய அதிகாரிகளுக்கு மண்டை வலி எடுத்துவிட்டது.

பொய் வழக்குகள்

வேறு வழி இல்லாமல் Price Waterhouse and Co மீதே இல்லாத வழக்கு எல்லாம் போட்டு 243 மில்லியன் ரபல் (9.4 மில்லியன் அமெரிக்க டாலர்) அபராதம் எல்லாம் விதித்தது ரஷ்ய அரசு. பணிந்தது Price Waterhouse and Co. பணிந்த உடனேயே 14 நாட்களில் ரஷ்ய அரசு விதித்த அபராதங்கள், வழக்குகள் எல்லாம் பின் வாங்கப்பட்டன. அப்படியே மிரட்டி Yukos நிறுவனத்தில் இருந்து Price Waterhouse and Co-ஸை வெளியேற்றியது ரஷ்ய அரசு. அதன் பின் தான் Yukos நிறுவனம் மீது ரஷ்ய அரசாங்கத்தால் கை வைக்க முடிந்தது.

ரஷ்யாவின் ஒப்புதல்

2010-ம் ஆண்டில் ரஷ்ய அரசாங்கமே "நாங்கள் தான் Yukos நிறுவனத்தில் இருந்து அழுத்தம் கொடுத்து Price Waterhouse and Co நிறுவனத்தை வெளியேற வைத்தோம்" என ஒப்புக் கொண்டது என்றால் Price Waterhouse and Co-வின் திறமைகளை புரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் இவர்கள் தவறே செய்ததில்லையா..? ஏன் இல்லை..? இதோ...

தவறுகள்

1. கண ரக வாகனங்களைத் தயாரிக்கும் Caterpillar நிறுவனத்துக்கு 2.4 பில்லியன் டாலர் வரியை மிச்சப்படுத்த குறுக்கு வழியில் ஆட்டோ ஓட்டியது,

2. அமெரிக்க பாடகர் Willie Nelson-க்கு 32 மில்லியன் டாலர் வரி செலுத்தாமல் இருக்க அமெரிக்க வருமான வரித் துறையில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி மிச்சப்படுத்தி மாட்டிக் கொண்டது,

2. AIG என்கிற பெரிய நிறுவனத்தை சின்ன அலட்சியத்தால் மூடுவிழா நடத்தியது,

3. Kanebo என்கிற ஜப்பானிய காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தில் நடந்த கணக்கு வழக்கு குளறுபடிகளால் Price Waterhouse and Co-ன் ஜப்பானிய துணை நிறுவனமான ChuoAoyama Audit Corporation ஜப்பானிய அரசால் தடை விதிக்கப்பட்டது.

4. Tyco என்கிற நிறுவனத்தின் முதலாளிகள் 600 மில்லியன் டாலர் திருட உதவியாக இருந்தது,

5. Global Trust Bank-ல் நடந்த குளறுபடிகளால் ஒரு வருடத்துக்கு இந்தியாவில் நிதி சார்ந்த நிறுவனங்களுக்கு ஆடிட் செய்யக் கூடாது என ஆர்பிஐ கொட்டியது

6. டெல்லி குடிநீரை தனியார் மயமாக்க உதவியது என நிறைய அவமானங்கள், திருட்டுத் தனங்கள் மற்றும் சர்ச்சைகள் இவர்களைச் சுற்றிக் கொண்டு தான் இருக்கின்றன.

சமீபத்திய சனி

சத்தியம் நிறுவனத்துக்கு கூட நம் Price Waterhouse and Co தான் கணக்கு வழக்குகளை எல்லாம் நேர் செய்து கொடுத்தார்கள். சத்தியம் பிரச்னை தலை விரித்தாட, ஒவ்வொரு சிக்கலாக வெளியே வந்தன. கடைசியில் சத்தியம் கம்ப்யூட்டர்சில் சில பொய் கணக்குகளை எல்லாம் நேர் செய்து கொடுத்த காரணத்துக்காக Price Waterhouse and Co இரண்டு ஆண்டுகளுக்கு (2017 - 18 மற்றும் 2018 - 19) எந்த கணக்கு வழக்கு சார்ந்த சான்றுகள் (Certificate) வழங்கக் கூடாது என தலையில் கொட்டி அவமானப்படுத்தியது செபி. அதோடு 2 மில்லியன் டாலர் அபராதமும் விதித்தது. அந்த ஒரு அவமானமே Price Waterhouse and Co மேல் இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரை, இந்தியாவில் அந்தள சந்தளை ஆக்கிவிட்டது. இத்தனை பிரச்னைகளைச் சமாளித்த, இவ்வளவு சர்ச்சைகளோடு தன் வேலையைப் பார்க்கும் Price Waterhouse and Co தான் இப்போது ரிலையன்சில் பெரிய முறைகேடுகள் நடப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் கவனிக்க வேண்டி இருக்கிறது.

ராஜினாமா

இந்த பயத்தினாலோ என்னவோ... சில தினங்களுக்கு முன் Reliance Capital மற்றும் Reliance Home Finance ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் ஆடிட்டர் பொறுப்பில் இருந்து திடீரென ராஜினாமா செய்திருக்கிறது. ஏன், என்ன என விசாரித்தால் "நாங்க கேக்குற விவரங்கள தராம எப்புடிங்க ஆடிட் பண்றது. அதொடு நிறைய முறை கேடான பணப் பரிமாற்றங்கள், ஏமாத்து வேலைகள் நடந்திருக்கு" என இந்திய கார்ப்பரெட் உலகில் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள் இந்த நேர்மையான ஆடிட்டர்கள். இந்திய நிறுவனங்கள் சட்டம் 143 உட்பிரிவு 12-ன் படி தன் ராஜினாம கடிதத்தை Reliance Capital, Reliance Home Finance மற்றும் மத்திய கார்ப்பரெட் விவகாரத்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி இருக்கிறார்களாம்.

அப்படி இல்லை

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை Pathak HD & Associates ஆகிய நாங்களும், Price Waterhouse and Co நிறுவனமும் இணைந்து தான் ஆடிட் செய்கிறோம். இதில் ஒரு சில விஷயங்கள் முழுக்க முழுக்க எங்கள் பார்வைக்கு மட்டும் தான் வரும். அதே போல ஒரு சில விஷயங்கள் முழுக்க முழுக்க Price Waterhouse and Co-வின் பார்வைக்கு மட்டும் தான் போகும். ஆக Price Waterhouse and Co சொன்ன சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகளை எல்லாம் நாங்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ஏதாவது முறையற்ற செயல்கள் நடந்திருந்தால் அதை ஆடிட் அறிக்கையில் வெளிப்படையாக தெரிவிப்போம் என முட்டு கொடுத்திருக்கிறார்கள் Pathak HD & Associates நிறுவனத்தினர்.

என்ன சொல்கிறது 143 (12)

இந்த சட்டப் பிரிவு ஒரு ஆடிட்டரின் ராஜினாமா பற்றிப் பேசுகிறது. "ஒரு ஆடிட்டர் தன் தணிக்கை பணியை செய்யும் போது , நிறுவனத்தில் சட்டத்துக்கு முரணாக தவறுகள் நடப்பதாகவோ அல்லது ஏமாற்று வேலைகளை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் செய்கிறார்கள் என்பதை கண்டாலோ, அதை மத்திய கார்ப்பரெட் விவகார அமைச்சகத்துக்கு முறையாகத் தெரியப்படுத்த வேண்டும்" என்கிறது 143 (12).

சட்டப்படி குற்றமில்லை

இப்படி ஒரு நிறுவனத்தின் ஆடிட்டர் மத்திய அமைச்சகத்துக்கு சொல்லிவிட்டால் நிறுவனத்தில், சட்டத்துக்கு முரணாக தவறுகள் நடப்பதாகவோ அல்லது ஏமாற்று வேலைகளை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் செய்கிறார்கள் என உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இதற்கு ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் தரப்பில் மும்பை பங்குச் சந்தையிடம் பதிலளித்திருக்கிறார்கள்.

ரிலையன்ஸ் பதில்

"Price Waterhouse and Co ஆடிட் நிறுவனம் பார்த்த விஷயங்கள் ஆதாரமற்றவை. இது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. அப்படி ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தில் ஏதாவது தவறு நடப்பதாக இருந்தால், அதை முதலில் நிறுவனத்தின் தணிக்கை குழுவோடு பேசி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அதையும் Price Waterhouse and Co செய்யவில்லை. ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் ஒரு ரூபாயைக் கூட தவறாக பயன்படுத்தவில்லை அதற்கு ரிலையன்ஸிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன" என காட்டமாக பதில் கொடுத்திருக்கிறது ரிலையன்ஸ் கேப்பிட்டல்.

நிறுவனத்தில் விசாரணை

இந்த பக்கம் Price Waterhouse and Co ஆடிட் நிறுவனத்தை கண்டித்து விட்டு, அந்த பக்கம் Crawford Bayley & Co என்கிற சட்ட நிறுவனத்தை கூப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்களாம். "எங்க கம்பெனில ஏதுனா ஏமாத்து வேலை, பித்தலாட்டம் நடக்குதா பாருங்க" என விசாரணைக்கு உத்தரவிடப் போகிறார்களாம். ரிலையன்ஸ் தங்களை அழைத்து பேசியது உண்மை தான், ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என Crawford Bayley & Co சட்ட நிறுவனமே சொல்லி இருக்கிறார்கள். ஆக ஒருவேளை தவறு நடந்திருக்கலாமோ என ரிலையன்ஸ் சலனப்படுவதை இதில் பார்க்க முடிகிறது.

தனி நபர் விசாரனை

இந்த சட்ட நிறுவனம் தன் விசாரணையைத் தொடங்கினால் இரண்டு வாரத்துக்குள் ரிலையன்ஸ் குழுமத்தில் நடக்கும் பணப் பரிமாற்றங்களை முழுமையாக ஆய்வு செய்து ஒரு அறிக்கையை மேலிடத்துக்கு கொடுக்குமாம். இந்த Crawford Bayley & Co சட்ட நிறுவனம் போதாதென்று ஒரு நிதி சார்ந்த தடயவியல் விசாரணையாளரையும் (Financial Forensic Investigator) தனியாக விசாரிக்கச் சொல்ல இருப்பதாக ரிலையன்ஸ் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறதாம்.

ஆடிட் நிறுவனம்

Price Waterhouse and Co நிறுவனமோ ரிலையன்ஸை எதிர்த்து வாதிட Shardul Amarchand Mangaldas, J Sagar and AZB சட்ட நிபுணர்க்ளோடு கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். ரிலையன்ஸ் மட்டுமின்றி National Financial Reporting Authority (NFRA) and the Serious Fraud and Investigation Office (SFIO) என அரசு அமைப்புகளுக்கு தகுந்த பதில் அளிக்கும் விதத்திலும் தன் வாதத்துக்கான விவரங்களை எடுக்கச் சொல்லி இருக்கிறார்களாம்.

இது புதுசோ..?

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு எதிராக உலகின் முன்னணி ஆடிட் நிறுவனம் Price Waterhouse and Co-வே முன் வந்து ஏமாற்று வேலைகலைச் சொல்கிறது என்றால்... நடந்திருப்பது சாதாரன Fraud ஆக இருக்காது. பெரிய சைஸ் கார்ப்பரெட் ஏமாற்று வேலையாக, புது வித Fraud ஆக, இதுவரை கார்ப்பரெட் இந்தியா பார்த்திராத Fraud ஆக இருக்கலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.

மேலும் பல...

0 comments

Blog Archive