வீழ்கிறதா விஜய் சேதுபதி கொடி...? எங்கு சறுக்குகிறார் மக்கள் செல்வன்!

கருத்த தேகம், தெளிவான பார்வை பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம், அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்த கதைத்தேர்வு இவை அத்தனையும் விஜய் சேதுபதி...

கருத்த தேகம், தெளிவான பார்வை பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம், அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்த கதைத்தேர்வு இவை அத்தனையும் விஜய் சேதுபதியை நாயகனாக தமிழகம் அள்ளிக்கொள்ள காரணமாக மாறியது.

இயக்குநர்களிடமும் ரசிகர்களிடமும் விஜய் சேதுபதி பாராட்டிய அன்பு, விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என தமிழ் சினிமா அன்போடு அழைக்க காரணமாய் மாறியது.

ரசிகர்களுக்கு பணம் கொடுத்து உதவுவது, தயாரிப்பாளருக்காக சம்பளத்தை விட்டுக் கொடுப்பது என ஒரு நடிகனை தாண்டி மனிதாபிமானம் பாராட்டி மக்களின் மனம் கவர்ந்த விஜய் சேதுபதி அண்மைக்காலமாக கதை தேர்வில் கோட்டை விடுகிறார். உச்ச நட்சத்திர அந்தஸ்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த விஜய் சேதுபதி மார்க்கெட்டில் இப்பொழுது ஓட்டை விழுவதாக பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.

இதற்கு காரணம் அண்மையில் வெளியான விஜய்சேதுபதியின் சிந்துபாத் திரைப்படம். இந்தப் படம் தமிழகம் முழுக்க முதல் நாளில் வசூல் செய்த தொகை ஏறத்தாழ ரூ.1.8 கோடி மட்டுமே. இது சராசரியான ஒரு திரைப்படம் முதல் நாள் வசூல் என்பதால் விஜய் சேதுபதியின் உச்ச நட்சத்திர அந்தஸ்து என்னவானது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விஜய் சேதுபதியின் சிந்துபாத் திரைப்படத்தின் வசூல் குறைந்ததற்கு காரணமும் விஜய் சேதுபதிதான் என்று சொல்லப்படுகிறது.

அண்மைக்காலமாக கதை தேர்வில் கோட்டை விடும் விஜய்சேதுபதி, அதிகப்படியான கேமியோ கதாபாத்திரங்களில் தோன்றுவதும் மீண்டும் மீண்டும் நண்பர்களுக்கு வாய்ப்பளிப்பதும் விஜய் சேதுபதிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2018 - ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘ஜுங்கா’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’,‘சிந்துபாத் ஆகிய ஐந்து திரைப்படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இதற்கிடையில் வெளியான ‘96’ திரைப்படம் மட்டும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் விஜய் சேதுபதி கவுரவ கதாபாத்திரத்தில் தோன்றிய டிராபிக் ராமசாமி, இமைக்கா நொடிகள், செக்கச் சிவந்த வானம் திரைப்படங்களின் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவரவில்லை.

மேலும் அடிக்கடி விஜய் சேதுபதி நடிப்பில் திரைப்படங்கள் வெளியாவதும் அவர் வெள்ளிக்கிழமை நடிகர் என்ற பெயரை பெற்றுதந்துள்ளதோடு, ஒரே மாதிரி எல்லா திரைப்படங்களிலும் நடிப்பதாய் ஒரு அயர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலங்களில் விஜய் சேதுபதி கதை தேர்வு, ரிலீஸ் தேதி ஆகியவைகளில் கவனம் செலுத்த தவறினால் விஜய் சேதுபதியின் திரை எதிர்காலம் இன்னும் மோசமாகும் என்கின்றனர் சினிமா அறிந்தவர்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive