"ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம்" நம்ம ஊர்லதான் இந்த ஆஃபர்...!

"மாவு வாங்கினால் தண்ணீர் இலவசம்"  என்று சென்னை மாவு கடைக்காரர் ஒருவர் அசத்தல் அறிவிப்பு செய்திருக்கிறார். வியாபாரத்தில் என்னதான்,...

"மாவு வாங்கினால் தண்ணீர் இலவசம்"  என்று சென்னை மாவு கடைக்காரர் ஒருவர் அசத்தல் அறிவிப்பு செய்திருக்கிறார்.

வியாபாரத்தில் என்னதான், இலவசமாக பொருட்கள் கொடுத்தாலும், தற்போதைய நிலைமையை உணர்ந்து தண்ணீருக்காக மக்கள் அவதிப்படுவதை கண்ட ஒருவர் 1 கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீரை இலவசமாக,  வழங்குகிறார்.

சென்னை திருவல்லிக்கேணியில், "ஒரு கப் மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம்" என்கிற அறிவிப்பு, தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தலைநகர் சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீருக்கு திண்டாடும் அவல நிலை ஏற்படுவது உலகம் அறிந்ததே.

சென்னையின் குறிப்பாக திருவல்லிக்கேணி - விடுதிகள், ஹோட்டல்கள், கோயில்கள் அதிகம் நிறைந்த பகுதி.
சென்னையின் பிற பகுதிகளை விட வேகமாக நிலத்தடி நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பகுதி. தண்ணீர் பற்றாக்குறையால் அதிகமான விடுதிகள் மற்றும் வீடுகள் காலியாகிவிட்டது.

இந்நிலையில், இப்பகுதி மக்கள் தண்ணீருக்கு படும் துயரத்தை பார்த்த, எல்லம்மன் மாவுக் கடை அதிபர் கிருஷ்ண ராஜேந்திரன் ஒரு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டார்.

அது, ஒரு கிலோ மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணீர் இலவசம் என்பது தான். ஏற்கனவே, தண்ணீருக்கு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் இப்பகுதி மக்களுக்கு இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தது போன்ற சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

”எங்கள் கடையில் வேலை செய்பவர்கள் தண்ணீர் கஷ்டத்தால் தினமும் பெர்மிஷன் கேட்கின்றனர்.
இதை பற்றி சிந்தித்த போதுதான் இந்த திட்டம் உதித்தது” என்று உரிமையாளர் கூறுகிறார்.

”இந்த அறிவிப்பு எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. மாவு வாங்குவதும் சேர்த்து தண்ணீரும் பெற்று செல்கிறோம். இது எங்கள் வேலையை குறைக்கிறது.” என்று வாடிக்கையாளர் ஒருவர் கூறுகிறார்.

”தனியார் லாரியின் மூலம் தான் தண்ணீர் பெற்று மிகவும் சிரமப்பட்டு இந்த சேவையை செய்து வருவதாகவும், இது தங்களுக்கு வியாபாரம் சார்ந்தது மட்டுமல்ல, சென்னையின் எதிர்காலம் சார்ந்த ஒரு பிரச்னை. எனவே, இது தற்காலிகமானது தான். இது தொடர கூடாது” என்று வேதனை தெரிவிக்கிறார் கடை அதிபர் பார்த்தசாரதி.

மாவு வாங்கினால் தண்ணீர் இலவசம் என்கிற இந்த அறிவிப்பு கவர்ச்சிகரமாக இருந்தாலும், கவலைக்கிடமாக இருக்கும் சென்னையின் தண்ணீர் ஆதாரம் காக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த விளம்பரம் தெரிவிக்கும் அபாய அறிவிப்பாக உள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive