தக்காளிச் செடிக்கு எப்போ எப்படி எவ்ளோ தண்ணீர் ஊத்துனா செழிப்பா வளரும் தெரியுமா? இதைப் படியுங்க

தக்காளி நமது அடுப்பங்கறையில் தேவைப்படும் மிக அத்தியாவசியமான காய்கறி. வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய பயிரில் மிக முக்கியமானது. தக்காளி இல்லா...

தக்காளி நமது அடுப்பங்கறையில் தேவைப்படும் மிக அத்தியாவசியமான காய்கறி. வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய பயிரில் மிக முக்கியமானது. தக்காளி இல்லாத உணவை வீட்டில் எண்ணிப்பார்க்க முடியாது. ஒருநாளில் மூன்று வேளைகளில் ஒரு வேளையாவது நிச்சயம் தக்காளியின் துணையை நாம் நாடித்தான் ஆக வேண்டும்.

மிகச் சிறந்த தோட்டப்பயிரான தக்காளியில் தற்போது எண்ணற்ற கலப்படங்கள், அதிக விளைச்சலுக்காக தெளிக்கப்பட்ட மருந்துகள் என எண்ணற்ற தீங்குகளுடன் தான் சந்தையில் கிடைக்கின்றன. வீட்டில் எளிதாக வளர்க்க முடியும் என்கிற பட்சத்தில் எதற்காக நாம் வெளிச்சந்தையில் அதை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்.

குழப்பத்திற்கு பதில்

தக்காளியை வீட்டிலேயே பயிரிட முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் எப்படி பராமரிப்பது என்ற மிகப்பெரிய கேள்வி உங்களுக்குள் நிச்சயம் எழும். முறையாக தக்காளிச் செடிக்கு ஊட்டச்சத்துகள் கிடைத்தாலே தக்காளிப்பழங்களை அதிகமாக பெறலாம். சரியான ஊட்டச்சத்துகளை தக்காளிச் செடி பெறுகிறதா என்பதை தக்காளிச் செடியின் நிறத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். மஞ்சள் நிறமாக இருந்தால் செடிக்கு போதிய ஊட்டச்சத்துக் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.அதுமட்டுமில்லாமல் இதைப் பராமரிப்பதற்கு பெரிய மெனக்கெடல் தேவை இல்லை என்பதால் உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கலாம்.

தக்காளிச் செடி- 5 வகைதண்ணீர் பாசனமுறை

    மழைநீரை பயன்படுத்தும் முறை
    கவனிப்பாரற்று இருக்கும் நிலையில் என்ன செய்வது
    எத்தனை முறை தக்காளிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்

தண்ணீர் பாசனமுறை:

தக்காளிச் செடிக்கு தண்ணீர் ஊற்றுவது மிகவும் எளிமையான வழியாகும். ஒரு செயலைச் செய்துப் பார்க்கும் போது தான் உண்மையான அனுபவத்தைப் பெற முடியும். ஆனால் பின்வரும் தொழிநுட்பங்களைப் பின்பற்றி பாசனம் செய்தால் தக்காளி செடியின் மகசூல் நல்லதாக இருக்கும்.

தக்காளிச் செடியை சுற்றி தண்ணீரை மெதுவாக மண்ணுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீரை விட வேண்டும். ஓடுகின்றத் தண்ணீரால் ஒரு பயனும் இல்லை. மாறாக அது மண்ணுக்குத் தேவையான ஊட்டச்சத்தை திருடிவிட்டுச் சென்று விடும். எனவே 5 முதல் 6 இன்ச் தண்ணீரில் மண் மூழ்குமளவுக்கு தண்ணீரை விட வேண்டும்.

ஈரப்பதத்தைக் கணக்கில் கொண்டு தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் செடியின் வேர்களுக்கு காற்று தேவை என்பதால் தண்ணீரில் செடியை மூழ்கடித்து விட வேண்டாம்.

நேரிடையாக செடியின் மீது தண்ணீரை ஊற்ற வேண்டாம். செடியைச் சுற்றி தண்ணீரை ஊற்ற வேண்டும். அப்போது தான் வேர்களுக்கு தண்ணீர் திறம்படக் கொண்டு சேரும்.

இரவு நேரங்களில் தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஏனெனில் குளிர்பாங்கான சீதோஸ்ண நிலைகளில் தண்ணீரை ஊற்றும் போது தக்காளி செடிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்.

#1 தண்ணீரை மெதுவாக விடவும்:

தக்காளிச் செடிகளுக்கு தண்ணீர் விடுவது என்பது செடிக்குத் தேவையான அளவு தண்ணீரை விட்டு அது நீண்ட நேரத்திற்கு இருந்து தக்காளிக்குத் தேவையான உடலியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இது உதவுகிறது. எனவே தண்ணீரைக் கொண்டு தக்காளிச் செடியை மூழ்கடிக்க வேண்டாம். தண்ணீரை மண் உட்கிரக்கும் அளவுக்கு மட்டும் தண்ணீர் செலுத்தினால் போதுமானது.

#2 தினந்தோறும் தண்ணீரிடுங்கள்:

மண்ணில் உள்ள ஈரப்பதம் விரைவில் காலியாகி விடுகிறது என்றால் அதற்கேற்றவாறு ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தண்ணீர் இட்டாலே போதுமானது. அதே சமயத்தில் ஈரப்பதம் அதிகமாக நிலைத்திருக்கும் இடங்களில் வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் இட்டாலே போதுமானதாக இருக்கும். எது எப்படியோ ஈரப்பதத்தை கணக்கில் கொண்டு தண்ணீர் இட வேண்டும். மதிய வேலைகளின் தக்காளிச் செடி ஒரு மாதிரி தொங்கிய நிலையை அடைந்தால் கவலைப்படத் தேவையில்லை அதே சமயத்தில் சூரிய மறைவிற்கு பின்னும் அதே நிலைத் தொடர்ந்தால் செடி தண்ணீர் இல்லாமல் வாடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

#3 வேருக்குத் தான் தண்ணீர்:

தக்காளிச் செடிகளைப் பொருத்தவரைக்கும் வேருக்குத் தான் தண்ணீர் முதன்மையாகத் தேவைப்படுகிறது. செடிகளின் இலைகளுக்கோ தண்டுக்கோ நாம் தண்ணீரைச் செலுத்தி வீணடிக்கத் தேவை இல்லை. செடிகளைச் சுற்றி மண்ணில் ஊற்றும் போது நேரிடையாக அது வேருக்குச் செல்கிறது.

#4 எந்த நேரத்தில் தண்ணீர் ஊற்றுவது:

இரவு நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது சரியான அணுகுமுறையாக இருக்காது. ஈரப்பதத்தைப் பொறுத்து தான் தண்ணீரை ஊற்ற வேண்டும். சூரிய உதயத்திற்கு முன் தண்ணீர் ஊற்றுவது அதன் வளர்சிதை மாற்றங்களுக்கு ஊக்கமாக இருக்கும்.

மழைநீரை எவ்வாறு பயன்படுத்துவது?

மழை நீரானது தக்காளிக்கு மட்டுமல்ல எல்லா வகையான விவசாயத்திற்கும் அருமருந்து. ஏனெனில் மழைநீரில் கலந்துள்ள கெமிக்கலின் அளவு என்பது மிகவும் குறைவு. அதே சமயத்தில் மழைநீர் திடீரென அதிகமாகவும் பெய்யலாம். அப்போது தேவைக்கு அதிகமான தக்காளிச் செடிப்பகுதியில் தேங்கிவிடாதபடிக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு முறையில் நீரைச் சேமித்து தேவையான பொழுது தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் பல...

0 comments

Blog Archive